அரசியல் வாரிசால் விஜய் வாரிசு படத்துக்கு சிக்கல்?
Varisu Movie Update -விஜய் படத்தை வாங்க ரெட் ஜெயண்ட் முயற்சி செய்தும், அது நடக்காக நிலையில் வாரிசு படத்திற்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது
Varisu Movie Update -தளபதி விஜய் 'மாஸ்டர்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என கடந்த தீபாவளியின் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த அஜித் நடித்த துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பொங்கலன்று திரையிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது மட்டுமின்றி அதே 8 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துடன் மோதுகிறது.
உதயநிதி தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி துணிவு படத்திற்கு நிறைய தியேட்டர்களை புக் செய்து வருவதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகின. மேலும் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தில் ராஜுவின் வெங்கடேஸ்வரா நிறுவனமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் அவர்களால் தமிழ்நாட்டில் உதயநிதியை மீறி வியாபாரத்தில் காய் நகர்த்த முடியவில்லை.
சமீபத்தில் கழகத்தலைவன் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது பேசிய உதயநிதி, வாரிசு படமும், துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி எனவும், வாரிசு படத்தின் சில ஏரியா உரிமை கிடைத்துவிட்டால் இரண்டு படங்களுக்கும் சரிசமமாக தியேட்டர்கள் கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் வாரிசு படத்தின் சில ஏரியா உரிமையை வாங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
அஜித்தின் துணிவு படம் ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆகலாம் எனவும் விஜயின் வாரிசு படம் அதற்கு முந்தைய நாள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் உதயநிதி புது சிக்கலை வாரிசுக்கு கொடுத்திருக்கிறாராம். வாரிசு வரும் அதே தேதியில் தான் துணிவு படமும் ரிலீஸ் என முடிவெடுத்து இருக்கிறாராம் அவர். முதலில் சோலோவாக ரிலீஸ் ஆகும் படம் வசூல் அள்ளிவிடும் என்பதால் அதற்கு இடம்கொடுக்காமல் இரண்டு படங்களையும் ஒரே தேதியில் ரிலீஸ் செய்ய உதயநிதி சொல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் எல்லா படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் ரிலீஸ் செய்து வருகிறது. என்ன தான் அரசியல் பின்புலம் இல்லை என்று சொல்லிக் கொண்டாலும் உதயநிதியின் பக்கா பிளான் வாரிசு படத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது.
ஏற்கனவே தெலுங்கு இண்டஸ்ட்ரி, பொங்கல் தினத்தன்று தெலுங்கு படங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எடுத்த முடிவில் வாரிசு ரிலீசுக்கு அங்கே சிக்கல் ஏற்பட்டு விட்டது. ஏற்கனவே உதயநிதிக்கும், தளபதி விஜய்க்கும் குருவி படத்தின் போதே விரிசல் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் சமயம் பார்த்து உதயநிதி விஜயை லாக் செய்துவிட்டார். உதயநிதியிடம் சரண்டர் ஆவதை தவிர வாரிசு படக்குழுவுக்கு வேறு வழியில்லை என்பது போல் தெரிகிறது.
விஜய் படத்தை வாங்க ரெட் ஜெயண்ட் முயற்சி செய்தும், அது நடக்காக நிலையில் இப்படி சிக்கலை ஏற்படுத்துவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2