பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம்: ஆர்.கே.செல்வமணி

ஏப்ரல் 1 முதல் பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம் என பெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-03-20 17:45 GMT

ஆர்.கே.செல்வமணி (பைல் படம்).

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் திரைத்துறையில் பணிபுரியும் லைட் மேன் தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘விங்ஸ் ஆப் லவ்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்த இசை நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் இயக்குனர்கள் பாடகர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி ,பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி , இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ,கிருத்திகா உதயநிதி, பாடகர்கள் சிவாங்கி, பென்னி தயால், தயாரிப்பாளர்கள் கே ராஜன் , பிரமிட் நடராஜன் , மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர் கே செல்வமணி தெரிவித்ததாவது:

திரைப்பட துறையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சில பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர். பெரிய நடிகர்களின் படங்களில் தொழிலாளிகள் இறந்து விட்டால் அதிர்ஷ்ட வசமாக அவர்கள் குடும்பத்துக்கு உதவி கிடைக்கிறது.

ஆனால் சிறிய தயாரிப்பாளர்கள் படங்களில் விபத்து நடந்தாலோ அல்லது மரணம் ஏற்பட்டாலோ உதவ முடியாத நிலையில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.பல நேரங்களில் இறந்த பிணங்களை எடுக்க கூட வசதிகள் இல்லாத நிலை எற்பட்டு இருக்கிறது

சினிமாவில் இருக்கும் தொழிலாளர்கள் இறந்தால் யார் அவர்களை பாதுகாப்பது..? பெரிய ஸ்டார் யாரவது நடிச்சாதான் எதாவது உதவிதொகை கொடுப்பாங்க. அரசாங்கம் எந்த உதவியும் பண்ணதில்லை. நாங்கள் இணைந்து எல்லா தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்போம். ஏப்ரல் 1 லிருந்து பாதுகாப்பு இல்லாத படத்திற்க்கு படபிடிப்புக்கு போக மாட்டோம்.” என ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News