நடிகை நயன்தாரா… கைக்கடிகாரங்களின் காதலி..!

நடிகை நயன்தாராவுக்கு கைக்கடிகாரங்கள் மீது பெருவிருப்பமாம். கைக்கடிகாரங்களை வைப்பதற்காக ஒரு பீரோவே வாங்கி வைத்துள்ளாராம்.

Update: 2022-07-21 15:02 GMT

கைக்கடிகாரங்களாக வாங்கி 

குவிக்கும் நடிகை நயன்தாரா

  watch lover actress nayantharaபொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களின்மீது பெருவிருப்பம் இருப்பதுண்டு. அவ்வாறான பெருவிருப்பப் பொருட்களை, எங்கு கண்டாலும் அதனை வாங்கிக் குவித்திடும் எண்ணம் மேலோங்கும். சாத்தியமுள்ளோருக்கு அது சாதாரணம். வெகு சாதாரணம்.

ஆம். அப்படித்தான், நடிகை நயன்தாராவுக்கும் ஆடம்பரமான கைக்கடிகாரம் வாங்குவதில் அலாதி பிரியமும் வாங்கிக் குவிக்கும் சூழலும் உண்டு. கைக்கடிகாரம் என்றால் அவருக்கு, கொள்ளைப்பிரியமாம். இதுவரையிலும் தான் வாங்கிக்குவித்த அத்தனை அற்புத அழகிய கைக்கடிகாரங்ளை எல்லாம் பாதுகாத்து வைப்பதற்கென்றே தனியாக ஒரு பீரோவே வைத்துள்ளாராம்.

மேலும், அவர் எங்கு சென்றாலும் விலை உயர்ந்த கைக் கடிகாரங்களைக் கண்டால் கொஞ்சமும் தயங்காமல் உடனே வாங்கிக் கொள்வாராம். நயன்தாராவுக்கு மிகவும் பிடித்தவை ரிச்சர்ட் மில்லே (Richard Mille) கைகடிகாரங்கள்தானாம். அத்துடன், அவர் விரும்பி அணியும் ஒரு கைக்கடிகாரத்தின் விலை சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது. இத்தகவல் அவரது ரசிகர்களை மட்டுமின்றி திரைப்பிரியர்கள் அனைவரையுமே ஆச்சர்ய அதிர்ச்சியில் வாயடைக்க வைத்திருக்கிறதாம்.

ஆயினும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர் இந்த மாதிரி ஆடம்பரமாக இருப்பது சகஜம்தான் என்று கடந்து போகிறவர்கள் உண்டு எனினும், என்னதான் கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும் இந்த ஆடம்பரம் தேவைதானா என்கிற விமர்சனக் கருத்தை முன்வைத்து பரபரப்பை பற்றவைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Tags:    

Similar News