இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு விஜயம்… முதலமைச்சர் ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி..!

முதலமைச்சர்.ஸ்டாலின் அண்மையில் இயக்குநர் செல்வராகவன் குடும்பத்தினரை சந்தித்த நிகழ்வும்போட்டோவும்வைரலாகியுள்ளது.

Update: 2022-09-28 06:37 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் டைரக்டர் செல்வராகவன் 
குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். 

தமிழ்த் திரையுலகின் வித்தியாசமான இயக்குநர் செல்வராகவன் என்பதும் அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதும் எல்லோரும் அறிந்ததே. தற்போது அவரது இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் 'நானே வருவேன்' என்ற திரைப்படம் நாளை 29 ந்தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அண்மையில் இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்கு திடீரென சென்று குடும்பத்தினரை சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

ஏன் இந்த திடீர் விசிட்… சர்ப்ரைஸ்…

சென்னையில் கடந்த ஜூன் மாதம் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் செல்வராகவன், "எனக்கு சிறு வயதிலிருந்தே  ஸ்டாலினை மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட ஒருவர் தமிழக முதலமைச்சராக வரமாட்டாரா என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

'மக்கள் முதலமைச்சர்' என்றால், அது முதலமைச்சர் ஸ்டாலின்தான். நமது, தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டும் என்றால், அது நம் முதலமைச்சரால்தான் முடியும்" என அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

இந்தநிலையில், கடந்த ஜூலை 19-ம் தேதி இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் கொள்ளுப் பாட்டியான அலமேலு பத்மநாபன் காலமானார். இதற்கு ஆறுதல் சொல்லும் விதமாக முதலமைச்சர்ஸ்டாலின், இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்குச் சென்றாராம்.

அப்போது முதலமைச்சர், செல்வராகனின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரிராஜா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல்கூறி அளவளாவிவிட்டு, இயக்குநர் செல்வராகவனின் வெளியாகவிருக்கும் 'நானே வருவேன்' படம் வெற்றிபெற வாழ்த்தும் சொல்லியதோடு, செல்வராகவன் குடும்பத்தினரோடு முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்புகைப்படத்தைத்தான் தற்போது செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்புகைப்படம் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News