Vinusha Devi யார் இந்த வினுஷா தேவி?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அடுத்த போட்டியாளராக நுழைந்துள்ள வினுஷா தேவி குறித்து பார்க்கலாம்.

Update: 2023-10-01 14:33 GMT

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ ஆகிய பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் வினுஷா தேவி யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

வினுஷா தேவி யார்?

சென்னை பிறந்த வினுஷா தேவி நடிப்பின் மீது தீராத காதல் கொண்டவர். பல முயற்சிக்கு பிறகு NH4 படத்தின் மூலம் வெளிவுலகத்துக்கு தெரியவந்தார். ஆனாலும் அவருக்கு நடிப்பால் பெரிய பிரபல்யம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். அந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷினி ஹரிப்பிரியன் விலகியதும் அந்த இடத்தில் நடிக்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரோஷினி ஹரிப்பிரியன் அளவுக்கு இல்லையென்றாலும் கண்ணம்மா பாத்திரத்துக்கு ஏற்ற வகையில் ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வினுஷா தேவி

வினுஷா தேவி தன்னுடைய சிறு வயதிலிருந்தே கருமை வெறுப்பால் பாதிக்கப்பட்டார். பலருக்கும் இருக்கும் அதே குணம் கருப்பாக இருப்பதால் ஒதுக்கப்பட்டார். இதனை வீடியோ வழியாக பார்த்த கமல்ஹாசன் அவருக்கு அறிவுரை சொல்ல விரும்பவில்லை இது என கருத்து என்று கூறியிருந்தார்.

வினுஷா தேவிக்கு 4 கருப்பு வைரம் கொண்ட கிஃப்ட் ஒன்றை பரிசாக அளித்தார். பின் அவருக்கு வாழ்த்து கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வினுஷா தேவி நுழைந்ததை அடுத்து, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டு கேப்டனாக தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீப் ஆண்டனியிடம் வாக்குவாதம் செய்து தனக்கு அந்த பட்டயத்தை தரச் சொல்லி கேட்கிறார். ஆனால் தனது வாதத் திறமையால் பிரதீப் ஆண்டனி தான் விட்டுத்தர போவதில்லை என்று கேட்க, தானும் விட்டுக்கொடுக்க போவதில்லை என்கிறார் வினுஷா. அதன்பிறகு அடுத்த போட்டியாளர் வந்ததும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என தற்காலிகமாக வாதத்தை விட்டு வைத்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிக்சனின் வருகை பிக்பாஸ் சீசன் 7-க்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் விவரங்கள்

பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஆண் போட்டியாளர்கள்:

விஜய் வர்மா

சரவண விக்ரம்

கூல் சுரேஷ்

யுகேந்திரன்

நிக்சன்

பிரதீப் ஆண்டனி

மணி சந்திரா

விஷ்ணு விஜய்

பாவா செல்லத் துரை

பெண் போட்டியாளர்கள்:

ஐஷு விசித்ரா

ரவீனா

பூர்ணிமா ரவி

ஜோவிகா

வினுஷா தேவி

அக்ஷயா உதயகுமார்

மாயா கிருஷ்ணன்

அனன்யா ராவ்

இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ரூல்ஸுகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. என்ன மாதிரியான ரூல்ஸ்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

Tags:    

Similar News