கேஜிஎஃபில் துவங்கும் விக்ரம் பட மாஸ் சண்டைக் காட்சிகள்! வேற லெவலுக்கான அப்டேட்!

விக்ரம் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக மிகவும் மெனக்கெடுவார். இப்போது தங்கலானிலும் இருவேறு தோற்றங்களில் நடிக்கிறாராம். இப்போது கேஜிஎஃப்பில் அவருக்கான சண்டைக் காட்சிகள் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. இன்று முதல் அடுத்த 40 நாட்களுக்கு கேஜிஎஃப்பில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.;

Update: 2023-02-15 11:40 GMT

விக்ரம் நடிப்பில் கோப்ரா படமும் பொன்னியின் செல்வன் படமும் கடந்த ஆண்டு வெளியானது. இதில் கோப்ரா பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும், பொன்னியின் செல்வன் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண்டு பொன்னியன் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசாக காத்திருக்கிறது வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தாமதமாகும் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து முதல் சிங்கிள் காதலர் தினத்தில் வெளியாகும் என பேசப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. இதற்கு காரணம் எடிட்டிங் தாமதமாவதுதான் என்கிறார்கள். இதனால் இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்று கூறுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் 2 அப்டேட் இப்படி இருக்க, தமிழில் அடுத்து அவர் நடிக்கும் படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இது அமைந்துள்ளது.

விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை கே இ ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இவர்தான் சூர்யா 42 படத்துக்கும் தயாரிப்பாளர். ஒரே நேரத்தில் சூர்யா, விக்ரம் இருவரின் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில், தங்கலான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

விக்ரம் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக மிகவும் மெனக்கெடுவார். இப்போது தங்கலானிலும் இருவேறு தோற்றங்களில் நடிக்கிறாராம். இப்போது கேஜிஎஃப்பில் அவருக்கான சண்டைக் காட்சிகள் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. இன்று முதல் அடுத்த 40 நாட்களுக்கு கேஜிஎஃப்பில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

பின்னர் ஏப்ரல் 15ம் தேதி வரை சென்னையில் கடைசிக் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பேட்ச் ஒர்க் காட்சிகள் சில நாட்கள் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 28ம் தேதிக்குள் படப்பிடிப்பு முழுதையும் முடித்துவிட்டு டப்பிங்கும் பெரும்பகுதி முடிக்கவேண்டும் என படக்குழு முடிவு செய்துள்ளது.

தங்கலான் படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனனும், பார்வதி யும் நடிக்கிறார்களாம். இந்த கதாபாத்திரத்துக்காக பார்வதி மிக அதிக அளவில் எடைகுறைப்பில் ஈடுபட்டுள்ளார். மாளவிகா மோகனனும் சண்டைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். விக்ரமும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். சரி பா ரஞ்சித் எதையோ மிக வேகமாக சமைத்து வருகிறார் பார்க்கலாம் என்ன வருகிறது என்று. 

Tags:    

Similar News