வேகம் குறையாத 'விக்ரம்' ஓட்டம்… அதகளப்படுத்தும் அசத்தல் வசூல்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படம் ஆறு வாரங்களைக் கடந்து வசூலில் 500 கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Update: 2022-07-04 10:22 GMT

விக்ரம் பட போஸ்டர்.

நடிகர் கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகளைக் கடந்த நிலையில், கடந்த ஜூன் மூன்றாம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கமலை நாயகனாகக் கொண்டு பிரமாண்டத் திரைப்படமாக 'விக்ரம்' வெளியானது.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் ஃபஹத் ஃபாசில், நடிகர் நரேன் உள்ளிட்டோர் நடிக்க, நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பன்மொழித் திரைப்படமாக உலகெங்கும் திரையரங்கங்களில் வெளியானது 'விக்ரம்'.

படம் வெளியாகி, தற்போது ஒரு மாதத்தை திரையரங்குகளில் நிறைவு செய்துள்ளது. கடந்த 30 நாட்களில் படத்தின் வசூல் உலக அளவில் 420 கோடி ரூபாய்களைத் தாண்டியுள்ளது. 'விக்ரம்' வெளியானதின் பிறகு, அடுத்தடுத்து தமிழில் பல படங்கள் வெளியான நிலையிலும் அனைத்தையும் முந்திக்கொண்டு தொடர்ந்து முன்னணியில் உள்ளது 'விக்ரம்'.

இந்தநிலையில், தொடர்ந்து படத்தின் வசூல் 500 கோடிகளை எட்டிக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கமலின் திரையுலக கேரியரில் அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமையும் 'விக்ரம்' படத்திற்கு கிடைத்துள்ளது. படம் தற்போது 6 வாரங்களைக் கடந்த நிலையில், தமிழகத்தில் 175 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் கடந்துள்ளது.

Tags:    

Similar News