பெயரை மாற்றிக்கொண்ட விக்ரம் த்ரிஷா
நடிகர் விக்ரம் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.;
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்ட திரைப்படமாக உருவாகியுள்ள கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. டீசரும் பாடல்களும் செம வைரலாகி வருகிறது. உலகெங்கும் உள்ள திரைரசிகர்கள் 'பொன்னியின் செல்வன்' படம் வெளிவரப்போகும் செப்டம்பர் 30-ம் தேதியை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும் வந்தியத்தேவனாக கார்த்திக்கும் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும் குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். இந்தநிலையில், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் தனது பெயரை ஆதித்ய கரிகாலன் என்றும் த்ரிஷா தனது பெயரை குந்தவை என்றும் மாற்றிக் கொண்டுள்ளனர்.
இந்தப் பெயர் மாற்றமும் வைரலாகி படத்துக்கான புரொமோஷனுக்கு பக்க பலமாக ஆகியுள்ளது.