விஜய் கட்சியில் சேரும் லோகேஷ்! இந்த துறைதான் - விஜய் ருசிகரப் பேச்சு
லோகேஷ் கனகராஜுக்கு அரசியல் கட்சியில் பதவி வழங்கப்போவதாக விஜய் பேசியதால் சிரிப்பலை எழுந்தது.;
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று (நவ.01) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ், 'பிக் பாஸ்' ஜனனி, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
குட்டிக் கதை
மேடை ஏறியதுமே 'நான் ரெடிதான் வரவா?' என்ற 'லியோ' பாடலைப் பாடி பீடிகையுடனே தனது பேச்சை தொடங்கினார் விஜய். தனது வழக்கமான குட்டிக் கதையை விஜய் சொல்லத் தொடங்கி, ஒரு காட்டில் மான், மயில், முயல் என்று சொல்லிக் கொண்டே வந்து, 'காக்கா, கழுகு' என்று அழுத்திச் சொன்னதும் அரங்கமே ஆர்ப்பரிப்பில் அதிர்ந்தது. பின்னர், "காடுன்னு இருந்தா இதெல்லாம் இருக்கும் தானே. அதுக்கு சொன்னேன்ப்பா" என்று ஒருவாறு சமாளித்தார்.
"ஒருத்தர் வில் அம்பு எடுத்து போறார். உன்னொருத்தர் ஈட்டி எடுத்து போறார். வில் எடுத்து போனவர் முயல வேட்டையாடினார். ஈட்டி வைத்திருந்தவர் யானைய குறி வெச்சு மிஸ் பண்ணிட்டார். ரெண்டும் பேரும் ஊருக்கும் திரும்பி வருவாங்க. இதுல யாருக்கு வெற்றி. அந்த யானைய குறி வைத்தவர் தான் வெற்றி அடஞ்சவர்" என்று கூறி எதை ஆசைப்பட்டாலும் பெரிதாக ஆசைப்பட வேண்டும் என்று அட்வைஸ் செய்தார்.
லோகேஷுக்கு அமைச்சர் பதவி
விஜய் மேடை ஏறிய பேசிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த தொகுப்பாளர்கள், லோகேஷ் 10 படம் பண்ணி முடிச்சத்துக்கப்புறம் சினிமாவில் இருந்து விலகி உங்க அரசியல் கட்சியில் சேர வந்தா அவருக்கு என்ன பதவி கொடுப்பீங்க என விஜய்யிடம், கற்பனையாக ஒரு கேள்வி கேட்டனர். இதற்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவை லோகேஷுக்கு வழங்குவேன் என விஜய் சொன்னதும் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
இந்த விழாவில், நடிகர் மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் பேசினர். அவர்கள் அனைவரும் விஜய்யின் நடிப்பை பாராட்டினர்.
விஜய்யின் 'லியோ' திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழ் சினிமாவின் உலக அளவிலான வெற்றிக்கு ஒரு அடையாளமாக அமைந்துள்ளது.
இந்த வெற்றி விழாவில், லோகேஷ் கனகராஜ் பற்றி விஜய்யின் புகழாரம் பலரையும் கவர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை விஜய்யின் பேச்சு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' ஆகிய அனைத்து படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறியுள்ளார்.