விஜய் டி.வி. தொகுப்பாளினி பிரியங்கா நடு ரோட்டில் போட்ட குத்தாட்டம்

விஜய் டி.வி. தொகுப்பாளினி பிரியங்கா கனடாவில் நடு ரோட்டில் போட்ட குத்தாட்டம் போட்டுள்ளார்.

Update: 2022-08-17 10:05 GMT

விஜய் தொலைக்காட்சியில் அறிமுகம் இல்லாதவராக தொகுப்பாளினியாக தனது வேலையை தொடங்கி இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருப்பவர்  பிரியங்கா. இந்த தொலைக்காட்சியில் இவர் இல்லாத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறார். தன்னை யார் கலாய்த்தாலும் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை இவர் நடத்துவதே ஒரு ப்ளஸ்ஸான விஷயம்.

தொலைக்காட்சியில் இருந்து வெளிநாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் செல்வது வழக்கம். அப்படி நிறைய பிரபலங்கள் ஊர் ஊராக சுற்றியிருக்கிறார்கள். இப்போது பிரியங்கா தனிப்பட்ட முறையில் கனடா சென்றாரா அல்லது தொலைக்காட்சி மூலம் பயணமா என்பது தெரியவில்லை. அவர் அங்கு நடுரோட்டில் போட்ட குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது..

Tags:    

Similar News