விஜய் சேதுபதி நடிக்கும் வெப்சீரிஸ்...! இவர்தான் இயக்குநராம்!

விஜய் சேதுபதி வெப்சீரிஸில் நடித்திருந்தாலும் இதுவரை தமிழில் அவர் நடிக்கவில்லை.இதுதான் அவர் தமிழில் நடிக்கும் முதல் இணையத் தொடர். சினிமாவைத் தாண்டி வெப்சீரிஸும் ரசிகர்களை அதிக அளவில் கவர்வதால் இந்த முறைக்கும் நடிகர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகிறார்கள்.;

Update: 2023-04-02 03:30 GMT
விஜய் சேதுபதி நடிக்கும் வெப்சீரிஸ்...! இவர்தான் இயக்குநராம்!
  • whatsapp icon

ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் இணையத் தொடரைத் துவங்கி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார்.

நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்று திரைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் அவ்வப்போது நல்ல நல்ல வெப்சீரிஸ்களை வாங்கி வெளியிட்டு அதன் மூலமும் பயனாளர்களைத் தக்கவைத்து வருகிறது ஹாட்ஸ்டார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வரவிருக்கிறது புதிய வெப்சீரிஸ் ஒன்று. இந்த சீரிஸை இயக்குவது தேசிய விருது வென்ற ஒரு இயக்குநர்.

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் புதுமுக இயக்குநர் மணிகண்டன். குறைந்த படங்களே இயக்கியிருந்தாலும் அவரது ஒவ்வொரு படமும் தரமானதாக இருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி சினிமா விரும்பிகள் மொழி வேறுபாடின்றி கொண்டாடிக் கொண்டிருக்கிற படங்கள் இவை.


ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கியிருந்தார் மணிகண்டன். எப்போதும் சமூகத்தில் நிகழும் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ரசிகர்களைக் கவரும் கதையில் திரைக்கதை அமைத்து படத்தை எடுக்கும் மணிகண்டன் இம்முறை வெப்சீரிஸில் என்ன செய்யப் போகிறாரோ என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி வெப்சீரிஸில் நடித்திருந்தாலும் இதுவரை தமிழில் அவர் நடிக்கவில்லை.இதுதான் அவர் தமிழில் நடிக்கும் முதல் இணையத் தொடர். சினிமாவைத் தாண்டி வெப்சீரிஸும் ரசிகர்களை அதிக அளவில் கவர்வதால் இந்த முறைக்கும் நடிகர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகிறார்கள்.

மதுரை உசிலம்பட்டியில் இதற்கான பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஷூட்டிங் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. செவன்சீஸ் எண்டர்டெய்ண்மெண்ட் பி ஆறுமுககுமார் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸுக்கு இசையமைக்கிறார் ராஜேஷ் முருகேசன். ஒளிப்பதிவு சண்முகசுந்தர்.

Tags:    

Similar News