விஜய் சேதுபதியின் 'விஜேஎஸ் 46' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்

Vijay Sethupathi Ponram Movie First Look- விஜய் சேதுபதி-பொன்ராம் கூட்டணி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இன்று வெளியாகிறது.

Update: 2022-11-10 06:42 GMT

Vijay Sethupathi Ponram Movie First Look-விஜய் சேதுபதி-பொன்ராம் கூட்டணி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இன்று வெளியாகிறது.

விஜய் சேதுபதி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியராகவு் இருந்து வருகிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி, 96 ஆகிய பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழைப் பெற்றவர். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு சாய் ரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவே இவரின் முதல் தெலுங்கு திரைப்படமாகும்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் 'விஜேஎஸ் 46' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பல மாதங்களாக படம் வெளியாகமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளனர். இப்படத்தில் விஜய் டிவி பிரபலம் புகழேந்தி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முன்னாள் மிஸ் இந்தியா கீர்த்திவாஸ் வாஸ் நடித்துள்ள இந்த அதிரடி-எண்டர்டெய்னர் படத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு போலீஸ் நிலையத்திற்குள் விஜய் சேதுபதியின் நிழற்படத்தில் இருக்கும் புகைப்படத்தைப் தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். ஒரு தொப்பி, லத்தி மற்றும் காவல் கண்காணிப்பாளர் அல்லது துணைக் கண்காணிப்பாளராக எம்.வாஸ்கோடாகமா என்று எழுதப்பட்ட பெயருடன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

vjs 46 movie name

பொன்ராம் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இன்று மாலை 7.40 மணிக்கு வெளியாகிறது.

இதற்கிடையில், கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு மைக்கேல், மெர்ரி கிறிஸ்மஸ், விடுதலை, மும்பைகார், ஜவான் உள்ளிட்ட படங்கள் நீண்ட வரிசையில் உள்ளன. இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

VJS 46 Cast & Crew, Story

இந்த நிலையில்  'விஜேஎஸ் 46' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News