விஜய் ஆண்டனிக்கு என்னாச்சு? டிரைலர் விழாவில் பரபரப்பு..!

விஜய் ஆண்டனியின் புதிய தோற்றத்தைப் பார்த்து வியந்த மக்கள்.;

Update: 2024-06-29 14:08 GMT

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் ரிலீஸ் விழாவில் மாறுபட்ட தோற்றத்தில் கலந்து கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சவுண்ட் என்ஜினியராக தனது பணியைத் தொடங்கி, பின் இசையமைப்பாளராக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கும் இசையைக் கொடுத்தவர் விஜய் ஆண்டனி. அவரது ஃபாஸ்ட் பீட் பாடல்களை ரசிக்காத இளைஞர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு சிறந்த பாடல்கள் பல கொடுத்துள்ளார்.

தமிழில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் வேறு படங்களுக்கு இசையமைக்காமல் தனது படங்களில் மட்டுமே இசையமைத்து வந்தார். இப்போதும் தான் நடிக்கும் படங்களில் மட்டுமே இசையமைத்து வருகிறார்.

நடிகராக பல படங்களில் நடித்தாலும் சமீபத்தில் வெளியாகும் பல படங்கள் அவருக்கு தோல்வியாகவே இருக்கின்றன. அதேநேரம் அடுத்த வெளியாக இருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. அதில் விஜய் ஆண்டனி முகம் மற்றும் கைகளில் வித்தியாசமான மையுடன் கலந்து கொண்டிருந்தார்.

ஒரு பக்க முகம் கைகளில் கருப்பு சாயம் பூசப்பட்டு வந்திருந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மற்றொரு படத்தின் ஷூட்டிங்கிலிருந்து அப்படியே வந்ததால் இந்த மாதிரியாக வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம், வரும் ஜூலை மாதம் திரைக்கு வர இருக்கிறது. 

Tags:    

Similar News