ராஜாவின் பார்வையிலேக்கு பிறகு அஜித் - விஜய்! வெளியில் தெரிந்த உண்மை..!

ராஜாவின் பார்வையிலே படத்துக்குப் பிறகு அஜித் விஜய் இணைந்து நடிக்கும் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-06-26 10:30 GMT

ராஜாவின் பார்வையிலே படத்துக்குப் பிறகு அஜித் விஜய் இணைந்து நடிக்கும் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் இருவருக்கும் ரசிகர்கள் அதிகம். இருவரது ரசிகர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என சமூக வலைத்தளங்களில் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படி இருவருக்கும் என்ன பகை என்பது யாருக்கும் தெரியாது. இருவரும் போட்டியாளர்கள் என்பதால் ஒரே நேரத்தில் வெளியான பல படங்களில் வெற்றி தோல்வியின் காரணமாக இருவரது ரசிகர்களும் சண்டை போட்டு வருகின்றனர். அதேநேரம் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த படம்தான் ராஜாவின் பார்வையிலே.


1995ம் ஆண்டு ஜானகி சவுந்தர் இயக்கத்தில், இளையராஜா இசையில் அஜித், விஜய் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்திரஜா, காயத்ரி சாஸ்திரி இருவரும் நடித்திருக்கிறார்கள். காயத்ரி மெட்டி ஒலி, ரோஜா, இலக்கியா உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

ராஜாவாக விஜய்யும், கௌரியாக இந்திரஜாவும் நடித்திருப்பர். கௌரிக்கு ராஜா மீது காதல், ஆனால் ராஜா விலகிச் செல்கிறார். இதற்கான காரணத்தை கேட்கும்போது, ராஜாவுக்கு சந்துரு எனும் நண்பன் இருந்ததாகவும், அவன் காதலில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனால் மனம் நொந்து தான் இந்த காதலை வெறுப்பதாகவும் ராஜா கூறுகிறான். இதன்பின்னர் கௌரி தன் மீது வைத்துள்ள காதலை புரிந்துகொண்டு ராஜாவும் காதலிக்க ஆரம்பிக்கிறான். இதனால் ஊருக்குள் கலவரம் ஏற்படுகிறது. இதனைத் தாண்டி காதலியைக் கைப்பிடித்தாரா ராஜா என்பதுதான் மீதி கதை.


இந்த கதையில் சந்துரு எனும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பார். இந்த ஒரு படம்தான் இருவரும் இணைந்து நடித்துள்ள ஒரே திரைப்படமாகும்.

இந்த படத்துக்கு பிறகும் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அந்த படம்தான் ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் என திரைப்படம். இதில் பார்த்திபன், அஜித், தேவயானி ஆகியோர் நடித்திருப்பர். இந்த படத்தில் முதலில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது விஜய்தானாம்.

விஜய்யிடம் இந்த படத்தில் நடிக்க சம்மதம் கேட்கச் சென்ற போதும், அவருக்கு அஜித் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததாம். அதனால் அஜித்தை பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி கேட்டாராம். அதை அஜித்திடம் கேட்ட ராஜகுமாரன், விஜய் சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடிக்க கேட்பதாகவும், நீங்கள் கணேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தால், இந்த படத்தில் நடிப்பதாகவும் கூறியிருக்கிறார்.


ஆனால் அஜித் ஏற்கனவே கமிட் ஆன சில படங்கள் இருப்பதால் இந்த படத்தில் முழு நேரமாக நடிக்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். அதேபோல விஜய்யும் ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததால் அவராலும் பார்த்திபன் நடித்த கணேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் இந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை. ஏற்கனவே முடிவு செய்தபடி அஜித்தை சுப்ரமணி கதாபாத்திரத்திலேயே நடிக்க வைத்தனர்.


இதுபோல, சமீபத்தில் விஜய்யை இயக்கி வரும் வெங்கட் பிரபுவும், மங்காத்தா படத்தில் விஜய்யை நடிக்க வைத்திருக்கலாம் என்று தோன்றியதாக கூறினார். இதை விஜய்யிடம் கேட்டபோது அவரே நடித்திருப்பேன் என்று கூறியதாக தெரிவித்திருந்தார். இப்படி விஜய், அஜித் படங்கள் மோதிக்கொண்டாலும் ஏதாவது ஒரு படத்தில் விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்காமலும் இல்லை. 

Tags:    

Similar News