திருமணப் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்ட விக்னேஷ் சிவன்..!

நயன்தாராவை மணம்முடித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது திருமணப் புகைப்படங்கள் சிலவற்றை ட்விட்டரில் வெளிட்டார்.;

Update: 2022-06-09 14:21 GMT

நயன்தாராவை மணம்முடித்த இயக்குநர் விக்னேஷ். 

தமிழ்த்திரையுலகின் லேடிசூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் 2015-ல் மலர்ந்த காதல் இன்று திருமணத்தை எட்டியது.


மாமல்லபுரத்தில் இன்று(09/06/2022) காலை பிரமாண்டமாக நடந்த திருமணத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன. மேலும், திருமண நிகழ்வுக்கு பத்திரிகை, ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.


அதோடு, திருமண நிகழ்வுகளை வீடியோ மற்றும் போட்டோ எடுக்க தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டுவிட்டதால், யாரையும் போட்டோ எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கவில்லை.


இதனால், திருமணத்தில் கலந்துகொண்ட யாரும் போட்டோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து இயலாமல் தவித்தனர்.


இந்தநிலையில், விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதனைத்தான் பத்திரிகை மற்றும் ஊடகத்தினரும் நண்பர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News