அன்பு தங்கமே! நீதான் எல்லாம்... நயன்தாராவை புகழ்ந்த பிரபல இயக்குனர்!

அன்புள்ள தங்கமே, என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி என்று, நடிகை நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.;

Update: 2022-04-30 06:00 GMT

 நயன்தாராவுடன் விக்னேஷ் சிவம். 

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'காத்துவாக்குல ரெண்டு காதல்' வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில், கதாநாயகன் விஜய் சேதுபதியுடன், நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

கடந்த 28 ம் தேதி வெளியான இப்படத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த நயன்தாராவை புகழ்ந்து தள்ளி, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவம் கூறியிருப்பதாவது:

அன்புள்ள தங்கமே & இப்போது கண்மணி … என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி! ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்வில் தாழ்வாகவும், அறியாமையிலும் இருக்கும்போது நீ எனக்கு முதுகில் தட்டி கொடுக்கும்போது எனக்காக எவ்வளவு உறுதுணையாக இருக்கிறாய் என்று எனக்கு தெரிகிறது.

நீ என்னுடன் நின்ற விதம்.. என்னை முடிவுகளை எடுக்க வைத்தது. இவை அனைத்தும் என்னையும் இந்த படத்தையும் முழுமைப்படுத்துகிறது! உன்னால்தான் இந்தப் படம்... உனக்குதான் இந்த வெற்றி !!! என் கண்மணி! என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News