மேடையில் மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்..
Viduthalai Audio Launch-விடுதலை படத்தில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்து மன்னிப்பும் கேட்டார் இயக்குநர் வெற்றிமாறன்.;
Viduthalai Audio Launch-ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரப்போகிறது. முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 'விடுதலை' படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தவருக்கு ஒரு நிமிட அமைதி அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. இளையராஜா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மேடையில் ஏறிப் படத்தின் இசையை வெளியிட்டனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், எல்லாருக்கும் வணக்கம். விடுதலை படத்தை பத்தி சொல்லனும்னா நம்ம எடுத்துட்டு வந்து காட்டுவதற்கு நமக்கான சேலஞ்சஸ் வந்து நம்மளை ஏத்துக்கிறது. நம்ம கூட சேர்ந்து பயணிக்கிறவங்க எல்லாருக்குமே ஏதோ ஒரு சேலஞ்ச் இருக்கு. அந்த சேலஞ்சை கடந்து வந்ததற்கு நன்றி சொல்றது தான் முறை. அவர்களுடைய பேர் மறந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி வெச்சுருக்கேன் என கூறி படத்தில் பணியாற்றிய எல்லா தொழிலாளர்கள் பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்
சிறுமலையில் வினோத் பட் என்பவருடைய கண்டிகை எஸ்டேட்டில் ஷூட்டிங் பண்ணினோம். அது 1300 ஏக்கர் இது அடர்ந்த காடாவே இருக்கு. அங்க பிளாஸ்டிக் போடக்கூடாது, குப்பை போடக்கூடாது, அது பண்ண கூடாது அது பண்ண கூடாது நிறைய கட்டுப்பாடுகள். எல்லாத்தையும் ஒத்துக்கிட்ட தான் உள்ளே போனோம் அந்தக் காட்டை அவர் அவ்வளவு பாதுகாப்பா வச்சிருக்காரு அந்தப் பொறுப்போடவே மொத்த யூனிட் வொர்க் பண்ணினோம்
இந்த படத்தில் விஜய சேதுபதி நன்றாக நடித்துள்ளார். நான் உண்மையில் எட்டு நாள் என்று நம்பினேன். முதலில் அந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது மலை மீது ஏறி சென்று சற்று சிரமப்பட்டு நடிக்க வேண்டும் என்று புரிந்தது. அதன் பிறகு எனக்கு விஜய் சேதிபதிதான் மனதில் வந்தார். பின்பு அவரிடம் பேசும்போது எட்டுநாள் என்றுதான் சொன்னேன். ஆனால் அந்த நிலப்பரப்பில் எப்படி படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ளவே 15 நாட்கள் சென்றுவிட்டது. அது எனக்குமே ஆடிஷன் மாதிரிதான் தெரிந்தது. அதன்பிறகு 8 நாளில் தொடங்கி 65 நாள் வரை படப்பிடிப்பு நடத்தினோம். முதல் பாதியில் விஜய் சேதுபதி குறைவாகதான் வருவார். ஆனால் இரண்டாம் பாதி அவர் பெரும்பாலான காட்சிகளில் வருவார்." என்றார்
உங்ககிட்ட இதை சொல்லியே ஆகணும். நான் நிறைய பேர் மேல அடிக்கடி கோபப்பட்டு இருக்கேன். அது கோபப்படுறதுக்கு காரணம், ரொம்ப முக்கியமான காரணம் என்னன்னா, என்னுடைய ஒரு இயலாமை தான். அது உங்களோட தப்பு இல்ல. என்னால முடியல, நான் நினைச்சது வரல, அந்த சிக்கல் இருந்து கடக்க தெரியாமல் நான் கோபப்படுறேன் அந்த கோபத்தை அடுத்தவங்க மேல காட்டுறேன். நம்ம கோவத்த வெளிப்படுத்துவதற்கு ஈஸியான வழி என்னன்னு கேட்டீங்கன்னா அசிஸ்டன்ட் டைரக்டர் கிட்ட தான். யார் என்ன பண்ணாலும் அவங்க மேல தான் நம்ம கோபம் திரும்பும். அதனால அசிஸ்டன்ட் டைரக்டர் கிட்ட நான் நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்
மேலும் இந்த படம் முடிந்ததும் வாடிவாசல் படம் தொடங்கும் என்றார்,
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2