விடுதலை படம் எப்படி இருக்கு? விடுதலை திரைவிமர்சனம்..
Viduthalai Review Tamil-வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படம் நாளை மறுநாள் மார்ச் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.;
Viduthalai Review Tamil-மீண்டும் வெற்றிமாறன் தான் யார் என்பதைக் காட்டியிருக்கிறார். படத்தின் கதையும் திரைக்கதையும் அவருக்கே உரிய பாணியில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர காத்திருக்கிறது. விடுதலை படத்தை பார்த்தவர் முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். சூரியின் நடிப்பும் வெற்றிமாறனின் இயக்கமும் பிரமாதம் என பாராட்டியுள்ளார் இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா.
வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படம் நாளை மறுநாள் மார்ச் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.
காவல்துறையில் பணிபுரியும் கடைநிலை காவலராக சூரியும், மக்கள் படை தலைவராக விஜய் சேதுபதியும் நேருக்கு நேர் மோதுவதாக கூறப்படும் படமாக இது அமைந்துள்ளது. காவல்துறையே ஒருவரைப் பிடிக்க போராடும் நிலையில், அவரை ஜீப் ஓட்டும் காவலரான சூரி எப்படி பிடிக்கிறார் என்பதாக மேலோட்டமான கதையில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் வெற்றிமாறன் எப்படி இந்த திரைக்கதையை அமைத்திருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கதைச் சுருக்கம் | Viduthalai Story
மக்களையும் இயற்கை வளங்களையும் காக்க போராடிக் கொண்டிருக்கும் ஒரு குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான பிரச்னையை படம் பேசுகிறது.
பிரச்னைக்குரிய பகுதியில் காவல் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் சூரி. அவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். இதனால் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகிறார்.
இதேபகுதியில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. அதற்கான பணிகளைத் துவங்கும் நிலையில் அதை எதிர்த்து சுற்றியுள்ள கிராமத்தினர் போராடுகின்றனர். இவர்களின் தலைவராக விஜய் சேதுபதி இருக்கிறார். இவர் காவல் துறைக்கு தலைவலியாக மாறுகிறார். இதே பகுதியில் வாழ்ந்து வரும் பெண் மீது சூரிக்கு காதல் வருகிறது. அதே நேரம் விஜய் சேதுபதியைப் பிடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
இவரைப் பிடித்து சிறையில் அடைக்க திட்டமிடும் காவல் துறையினர், சூரி உதவியுடன் விஜய் சேதுபதியைப் பிடிக்க செல்கின்றனர். அந்த பகுதியில் வாழும் மக்களை கொடுமைப் படுத்துகின்றனர். இதையெல்லாம் தடுக்க வேண்டுமானால் விஜய் சேதுபதியைப் பிடித்தாக வேண்டும் என்கிற சூழ்நிலை சூரிக்கு. சூரி விஜய் சேதுபதியைப் பிடித்தாரா, விஜய் சேதுபதிக்கு என்ன ஆனது, சூரி காதல் கைக்கூடியதா என்பது மீதிக் கதை
விடுதலை விமர்சனம் | viduthalai movie review
சூரி காமெடி நடிகர் என்ற எண்ணமே இல்லாமல் புதுமுக நடிகராக கதையின் நாயகனாகவே நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு பல படங்களில் இவர் நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளது. விஜய் சேதுபதி படத்தில் குறைந்த நேரமே வருகிறார் என்றாலும் படம் முழுக்க அவரைப் பற்றியே பேசுகிறார்கள்.
இளையராஜா இசை படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற பரபரப்பிலேயே நம்மை வைத்திருக்கிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2