விடுதலை படம் எந்த ஓடிடியில் வருது தெரியுமா?

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்திலிருந்து சமீபத்தில் தனுஷ் குரலில் வெளியான பாடல் வைரலாகி வருகிறது. பலரையும் கவர்ந்த இந்த பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.;

Update: 2023-02-09 05:34 GMT

வெற்றிமாறனின் விடுதலை படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படம் ஓடிடியில் எந்த தளத்தில் வெளியாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குநர் வெற்றிமாறன். அவரது ஒவ்வொரு படமும் அப்படி ஒரு தரமான படமாக இருக்கும். கொடுத்த காசுக்கு திருப்திகரமாக தியேட்டரிலிருந்து திரும்பி வரும்போது மனது அப்படி இருக்கும். இதனால் அவரது படங்களுக்கு மிகவும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.


தமிழகம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி பேசுபவர்கள் கூட வெற்றிமாறன் படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்போது வெற்றிமாறன் நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை எனும் படத்தை இயக்கியுள்ளார்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்திலிருந்து சமீபத்தில் தனுஷ் குரலில் வெளியான பாடல் வைரலாகி வருகிறது. பலரையும் கவர்ந்த இந்த பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

விடுதலை படத்தை திரையரங்குகளில் காண விரும்பும் ரசிகர்கள் மத்தியில் இதனை ஓடிடியில் வீட்டிலேயே அமர்ந்து பார்க்கவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். எந்த ஓடிடி தளத்தில் விடுதலை படம் வரப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஜீ5 ஓடிடி தளம் விடுதலை படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது. அநேகமாக பிளாக்ஷிப் டிவியில் இந்த படம் பிரிமியர் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.


விடுதலை படத்தின் முதல் பாடல் உன்னோட நடந்தா பாடலை தனுஷ் மற்றும் அனன்யா பட் ஆகியோர் தங்களது வசீகரக் குரலில் பாடி அசத்தியிருக்கிறார்கள்.

சூரி, விஜய்சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பாவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு வேல்ராஜ். ஆர்எஸ் இன்ஃபோடெய்ண்மெண்ட் தயாரிப்பில், படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். 

Tags:    

Similar News