விடாமுயற்சி அப்டேட்..! வரப்போவது இதுதானாம்..!
நடிகர் அஜித்குமார் இயக்குநர் மகிழ்திருமேனி இணைந்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம்;
நடிகர் அஜித்குமார் இயக்குநர் மகிழ்திருமேனி இணைந்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கையில், இன்று வெளியாகும் அப்டேட்டில் விடாமுயற்சி கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்திருப்பதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. அஜித்குமார் பிறந்தநாளில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஒரு ஆண்டு முடிந்தும் படம் நிறைவடையவில்லை என ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக படத்தை இரண்டு ஆண்டுகளாக எடுத்து வருவதால் படம் இந்தியன் 2 மாதிரி நெகடிவ் விமர்சனத்தை பெற்றால் என்ன செய்வது என வருத்தப்படுகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், அந்த படம் தீபாவளிக்கு இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு. அமரன் திரைப்படமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் படங்களில் ஒன்றாகும். அதே ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் விடாமுயற்சி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ளது.
தீபாவளிக்கு இல்லையா?
இதனால் தீபாவளிக்கு விடாமுயற்சியை வெளியிட முடியாத சூழல் நிலவுகிறது. இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்து கையைக் கடிக்கும் அளவுக்கு படநிறுவனம் வேலை செய்யாது என்கின்றனர். இதனால் விடாமுயற்சி படத்தை முன்கூட்டியே அதாவது அக்டோபர் 10ம் தேதியே வெளியிட திட்டமிடுகின்றனர்.
மிகவும் நெருக்கமாக நாள்கள் வருவதால் வேகவேகமாக படத்தை எடுத்து அப்படி அப்படியே எடிட் செய்து விரைவில் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
கங்குவா Vs விடாமுயற்சி
அக்டோபர் 10ம் தேதி ஏற்கனவே சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படமும் வர இருப்பதால் இந்த மோதல் மிகவும் சுவாரஸ்யமாக அமையப் போகிறது. கங்குவா Vs விடாமுயற்சி என சமூக வலைத்தளங்களில் வைரல் செய்து வருகின்றனர் இருதரப்பு ரசிகர்களும்.
வழக்கமாக விஜய் மற்றும் அஜித் தரப்புகளுக்கு இடையில்தான் அடிக்கடி முட்டிக்கொள்ளும். ஆனால் இந்த முறை விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதியே வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், இந்த முறை அஜித் ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும் மோதிக்கொள்ள இருக்கிறார்கள்.
அக்டோபர் 10
சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி திரைப்படம் கிளாஸ் ஆக இருப்பதால் இரண்டில் எந்த படம் வெற்றி பெறப்போகிறது என்பது தெரியவில்லை.
ஒருவேளை அக்டோபர் 10ம் தேதி இல்லையென்றால் படத்தை நவம்பரில் வெளியிடவும் திட்டம் இருக்கிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்றைய தினம் மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். இதில் விடாமுயற்சி படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் கதாபாத்திர பெயர்களும் தோற்றமும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது எக்ஸ் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்
#VidaaMuyarchi Update Today Evening At 5:05PM 💥📷 #AjithKumar pic.twitter.com/adJMbfMvtj
— உதய் அண்ணாமலை (@LMEsimply) July 19, 2024