Vidaamuyarchi இனி கால்ஷீட் தரமாட்டேன்... முகத்தில் அடித்தமாதிரி பேசிய அஜித்குமார்..!
விடாமுயற்சி படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். ஒரு பக்கம் இவரது போட்டியாளரான விஜய் அடுத்தடுத்து படங்கள் நடித்து வெற்றி கொடுத்து வரும் நிலையில், இவர் நடிப்பில் மிகவும் மெதுவாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விக்னேஷ் சிவனின் கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்த அஜித், கதையை இறுதி வடிவமாக உருவாக்க விக்னேஷ் சிவன் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டதால் கோபப்பட்டதாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவனின் கதையிலும் பெரிய அழுத்தம் இல்லை எனவும் அவர் சொன்ன ஒன்லைனுக்கும் படத்தின் இறுதி டிராப்ட்டுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் உணர்ந்த அஜித்குமாரும், லைகா நிறுவனமும் அவரை மாற்றிவிட்டு, மகிழ் திருமேனி கதையை படமாக்க முடிவு செய்தனர். அந்த படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்து, ஷூட்டிங்கையும் துவங்கினர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தடைப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் மகிழ்திருமேனிக்கும் அஜித்துக்கும் ஏற்பட்ட மனக்கசப்புதான் என்கிறார்கள்.
அஜித்திற்கு பிடித்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விடாமுயற்சி படத்திற்கும் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், படப்பிடிப்பு இடையிலேயே நீரவ் ஷா வெளியேறினார். அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் புதிய ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றம் அஜித்துக்கு பிடிக்கவில்லை. மகிழ் திருமேனிக்கும், நீரவ் ஷாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
மேலும், படப்பிடிப்பு தாமதமாகி வருவதும் அஜித்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது. பிப்ரவரி இறுதி வரை மட்டுமே அஜித்திற்கு கால்ஷீட் உள்ளது. ஆனால், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது.
இதனால், படப்பிடிப்பு தடைப்படலாம் என்று அஜித் எச்சரித்துள்ளார். தயாரிப்பாளரிடம் பேசிய அவர், பிப்ரவரிக்கு பிறகு கால்ஷீட் இல்லை, அதனால் அதற்குள் படத்தை முடிக்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிரமாக உள்ளது.
இந்த தகவல் வெளியானதும், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கள் நாயகனின் படம் தடைப்படக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிறுத்தை சிவாவுடன் 4 படங்கள், ஹெச் வினோத்துடன் 3 படங்களுக்குப் பிறகு, விக்னேஷ் சிவனுடன் இணைய முடிவெடுத்திருந்தார் அஜித்குமார். ஆனால் சில பிரச்னைகள் ஏற்பட்டு விக்னேஷ் சிவன் கதையில் நடிக்காமல் நிராகரித்துவிட்டார். இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி பரிந்துரையின் பேரில், லைகா நிறுவனம் மகிழ் திருமேனியைத் தேர்ந்தெடுத்தது. அவரது கதையைக் கேட்ட அஜித் நடிக்க சம்மதித்தார். மேலும் தொடர்ந்து 2 படங்கள் நடிக்க லைகா தரப்பிலிருந்து அஜித்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
விடாமுயற்சி திரைப்படத்தை வரும் ஏப்ரல் மாதம் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதுவரை 50 சதவிகிதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்திருக்கிறது என்று தகவல் வருகிறது. இதனால் என்ன செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை.