லண்டனில் விடாமுயற்சி.. இது என்ன புது டுவிஸ்ட்டு!?

லண்டனில் விடாமுயற்சி ஷூட்டிங் துவங்கி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2023-08-03 11:27 GMT

முழுக்க முழுக்க லண்டனில் Vidaamuyarchi in London எடுக்கப்பட்டு வெளியாகப் போகிறதாம் அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 62வது படமாக விடாமுயற்சி அமைந்துள்ளது. முன்னதாக இந்த படத்தில் மகிழ் திருமேனி ஒப்பந்தமாவதற்கு முன்பு விக்னேஷ் சிவனின் கதையில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் ஒதுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி உள்ளே கொண்டு வரப்பட்டார்.

மகிழ் திருமேனியிடம் மொத்தம் 3 கதைகள் இருந்ததாகவும் அதில் இரண்டை அஜித் ஓகே செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. அஜித் ஓகே செய்த கதைகளை லைகாவிடம் சொல்ல, அதில் ஒரு கதை சிறப்பாக இருக்கிறது என்றும் அதையே படமாக எடுக்கலாம் என டிக் செய்துவிட்டார்களாம்.

படத்தின் கதை போகும் போக்கில் அந்த கதைக்கான காட்சிகளை யோசித்தவர்களுக்கு இந்த கதைகள் ஏதோ ஒரு கொரியன் படத்தில் இருப்பது போல தோன்றியதால் அந்த பட நிறுவனத்திடம் அனுமதி வாங்க முடிவு செய்தார்களாம். வெளிநாட்டு படங்களிடம் அனுமதி என்பது கிட்டத்தட்ட அதன் ரீமேக் ரைட்ஸை வாங்குவது போலதான் என்பதால் அந்த படத்தை தமிழில் எடுக்கப் போகிறார்கள் என்று கூறினார்கள்.

இப்போது அந்த கதையை டெவலப் செய்து வந்த மகிழ்திருமேனியை திடீரென லண்டனுக்கு வரவழைத்துவிட்டார்கள். அங்கு அவர் லைகா நிறுவனர் சுபாஷ்கரனிடம் கதையை சொல்லியிருக்கிறார். இந்நிலையில் அவரின் யோசனைப்படி இந்த படத்தை ஏன் ஸ்டைலிஷ்ஷாக லண்டனில் எடுக்க கூடாது என முடிவு செய்திருக்கிறார்களாம்.

முழுக்க முழுக்க காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டு Vidaamuyarchi in London படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News