இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய விக்கி – நயன்தாரா
இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.;
இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்துள்ளது வைரலாக பரவி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் ஆன நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் இவர்களுக்கு பிறந்தது. வாடகைத்தாய் பிரச்சனை நீதிமன்றம் சென்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த மாதம் இந்த குழந்தைகள் தங்களது முதல் பிறந்த நாளை கொண்டாட உள்ளனர்.
உயிர் ருத்ரோ நீல் மற்றும் உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் – விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஓணம் பண்டிகையை தனது மகன்களோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கொண்டாடி இருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.