வேட்டையன் பர்ஸ்ட் சிங்கிள் எப்ப வருது தெரியுமா?

முதல் பாடல் எப்போது? வேட்டையன் படத்தின் முதல் பாடல் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2024-05-27 12:09 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய்பீம் இயக்குநர் த செ ஞானவேலின் வேட்டையன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் படங்கள் என்றாலே அவர் இன்ட்ரோ பாடலுடன்தான் அறிமுகமாவார். அண்ணாமலை படத்தில் இடம்பெற்றிருந்த வந்தேண்டா பால்காரன், பாட்ஷா படத்தில் வந்த நா ஆட்டோக்காரன், அருணாச்சலம் படத்தில் வந்த ஒருவன் ஒருவன் முதலாளி தொடங்கி, சந்திரமுகியில் இன்ட்ரோ ஃபைட் சீனில் அதைத் தொடர்ந்து தேவுடா தேவுடா பாடலில் அறிமுகமாவார். இப்படி இவரது எல்லா படங்களிலும் ஒரு இண்ட்ரா சாங் இருக்கும். ஆனால் சமீபத்திய படங்கள் சிலவற்றில் அதனை காணமுடியாமல் ரசிகர்கள் தவிக்க, அனிருத்தான் அதனை மீண்டும் துவக்கி வைத்தார்.

பேட்ட படத்தில் அவரது இண்ட்ரோ பாடல் மிகச் சிறப்பான பாடலாக அமைந்தது. அடுத்து தற்போது உருவாகியுள்ள வேட்டையன் படத்திலும் ஒரு இண்ட்ரோ சாங் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதில் அனிருத்துடன் சேர்ந்து ரஜினிகாந்த் ஆடியிருக்கிறாராம்.

பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒவ்வொரு நடிகரும் தங்களது தனித் திறமைகளைக் காட்டி இந்தப் படத்தை உயர்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. "வேட்டையன்" படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இசைப்புயல் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். "ஜெயிலர்" படத்தில் அனிருத்தின் இசையில் மிரண்ட ரசிகர்கள், "வேட்டையன்" படத்திலும் அதே மாயாஜாலத்தை எதிர்பார்க்கின்றனர். அனிருத்தின் இசை, படத்தின் கதைக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்பலாம். வேட்டையன் படத்தின் முதல் பாடல் குறித்தும் தற்போது தகவல் வந்துள்ளது. அதில் ரஜினியுடன் அனிருத்தும் சில நொடிகள் நடனமாடுகிறாராம்.

முதல் பாடல் எப்போது?

வேட்டையன் படத்தின் முதல் பாடல் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பாடல்தான் படத்தில் சூப்பர் ஸ்டாரின் இன்ட்ரோ பாடல் என்றும், அவரது அசத்தலான நடனத்தை இந்த பாடலில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறுகின்றனர். ஜூன் இரண்டாவது வாரத்தில் இந்த பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவு

திருவனந்தபுரம், திருநெல்வேலி, சென்னை, மும்பை, ஆந்திரா, ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மும்பையில் நடந்த படப்பிடிப்பின் போது, ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதேநேரம் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ரிலீஸ் தேதி

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024 தீபாவளிக்கு "வேட்டையன்" திரைக்கு வரும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழுவே அறிவித்துள்ள நிலையில், தேதியும் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வரும். இந்தப் படத்தின் டீசர் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News