முதல்வன் கதையில் சிவகார்த்திகேயன்..! வெங்கட்பிரபு இயக்கத்தில்...!

இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படத்தைப் போல ஒரு அரசியல் கதையாக இருக்கும் என்கிறார்கள்.

Update: 2024-06-11 14:52 GMT

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் கதை ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படம் மாதிரியான ஒரு கதை என்று கிசுகிசுக்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இளம் நடிகர்களில் முதன்மையானவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியிலிருந்து வந்து பெரிய திரையில் கொடி கட்டிப் பறக்கிறார். தமிழில் விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் ராணுவ வீரர், முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தையும் அடுத்து, சிவகார்த்திகேயன் படத்தை இயக்க வெங்கட்பிரபு காத்திருக்கிறார்.

மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு தெலுங்கு படத்தை இயக்கினார். ஆனால் பெரிய அளவில் வசூல் இல்லாத நிலையில், தற்போது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தை இயக்குகிறார். விஜய் படத்தை இயக்கி வருவதால் இவரது மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே அஜித் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, பின் சூர்யாவுடன் இணைந்தார். தற்போது விஜய்யை இயக்கி வருவதால் அவர் மூன்று நடிகர்களையும் இயக்கிய இயக்குநர்களில் முதல் ஆளாக வந்துள்ளார்.

தற்போது இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார். இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படத்தைப் போல ஒரு அரசியல் கதையாக இருக்கும் என்கிறார்கள். கோட் பட ரிலீஸுக்கு பிறகே இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News

கொடி (2016)
எல்கேஜி (2019)
சர்கார் (2018)
ஜோக்கர் (2016)