'வாரிசு' - படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியானது… கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்..!

Actor Vijay -நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தின் 'ரஞ்சிதமே... கொஞ்சணுமே...' பாடல் புரோமோ, சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.

Update: 2022-11-04 05:58 GMT

Actor Vijay -நடிகர் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படத்துக்குப் பிறகு, அடுத்த ஆண்டு(2023) பொங்கல் திருநாளில் வெள்ளித் திரையில் வெளியாகப் போகும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தினை பிரபல தெலுங்குப் பட உலக இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கிறார். மேலும், நடிகர்கள் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரோடு , குஷ்பு, ஷாம், சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்களும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் ரசிகர்களிடையே 'வாரிசு' திரைப்படத்தின் வருகை மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், 'வாரிசு' திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை(நவம்பர் 5ம் தேதி) வெளியாக உள்ள நிலையில், அதன் அறிவிப்போடு கூடிய 30 நொடி 'ரஞ்சிதமே… கொஞ்சணுமே…' பாடல் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

எனவே, நாளை(சனிக்கிழமை) முதல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என அனைத்து சமூக வலைத் தளங்களிலும் இனி, 'ரஞ்சிதமே… கொஞ்சணுமே…' பாடல்தான் ஆனந்தமான அதகளுத்துடன் ஆட்சி செய்யப் போகிறது என்கிறார்கள் விஜய் ரசிகர்கள் ஆணித்தரமாக. 'வாரிசு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோவைப் பார்த்து கோலிவுட்டின் பல்வேறு தரப்பினரிடையேயும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே நடிகர் விஜய்க்கு, 'அரபிக் குத்து…' பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்த ஜானி மாஸ்டர்தான் 'வாரிசு' திரைப் படத்தின் 'ரஞ்சிதமே… கொஞ்சணுமே…' பாட்டுக்கும் கொரியோகிராஃபி செய்திருக்கிறார் என்பது எதிர்பார்ப்பை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே ஏற்றிவிட்டிருக்கிறது.

தற்போது நடிகர் விஜய்க்கு, 48 வயதாகுது. ஆனால், இந்த வயதிலும் ஒரு 20 வயது இளைய நடிகரைப்போல எவ்வளவு கடினமான நடன ஸ்டெப்புகளையும் அநாயசமாகப் போட்டு அரங்கையே அதிர வைத்து வருகிறார் என்பது எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜய் பாடியுள்ள பாடல் என்றாலே அது நிச்சயம் படத்தின் ஸ்பெஷலான பாடலாகத்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்த விஷயம்தான். இசையமைப்பாளர் தமன் இசையில் 'வாரிசு' திரைப்படத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருக்கு என இப்போதே பாராட்டுகள் பரவலாகக் குவிந்த வண்ணம் உள்ளன.

'வாரிசு' திரைப்படத்தின் 'ரஞ்சிதமே… கொஞ்சணுமே…' பாடலின் புரோமோ வெளியான 38 நிமிடத்தில் 300k லைக்ஸ்களைப் பெற்று அசத்தலான ரெக்கார்டு படைத்து விட்டது என விஜய் ரசிகர்கள் வெற்றிக் களிப்போடு கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு அரை மணி நேரமும் ஏகப்பட்ட மில்லியன் பார்வையாளர்களை தன் பக்கம் இப்பாடல் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை செம சம்பவம் இருக்கு என நடிகர் விஜய் ரசிகர்கள் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் தரிசனம் கிடைத்த நிலையிலேயே விஜய் ரசிகர்கள் #VarisuFirstSingle ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து, சமூக வலைத் தளங்களின் பக்கங்களில் பற்றிப் பரவும் தீயென பரவவிட்டு வருகின்றனர். நடிகர் விஜய்யின் வாய்ஸ் மற்றும் டான்ஸ் ஒன்றே அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எனர்ஜியை கொடுக்கும் என்பது கடந்தகால வரலாறு. அது இப்போதும் நிகழவிருப்பது பெரிய கொண்டாட்ட செய்தியாகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News