வாரிசு படத்தின் சண்டைக்காட்சி புகைப்படம் 'லீக்'; இணையத்தில் வைரல்

Varisu Movie Leaked Stunt Scene Photo - வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருந்து சண்டை காட்சி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.;

Update: 2022-08-04 11:36 GMT

varisu movie update-வாரிசு படத்தில் விஜய்.

varisu movie update,-நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக முன்முறையாக நடிகை ராஷ்மிகா நடிக்கிறார். இதில் சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு அகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Varisu Movie Leaked Stunt Scene Photo


varisu movie update,-கடந்த ஜூன் 22ம் தேதி வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வாரிசு படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யின் புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது. இந்த புகைப்படம் படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி என்றும் கூறப்படுகிறது. இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News