நயன்தாரா -விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக களம் இறங்கினார் வனிதா விஜயகுமார்
Nayanthara Latest News -வாடகை தாய் மூலம் குழந்தை விவகாரத்தில் நயன்தாரா -விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக நடிகை வனிதா விஜயகுமார் களம் இறங்கி உள்ளார்.
Nayanthara Latest News -நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தற்போது, நான்கு மாதங்கள் கடந்த நிலையில், இந்த அக்டோபர் 9-ம் தேதியன்று தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்தார். உடனே, விக்னேஷ் சிவனின் இப்பதிவு இருவேறு வகையிலும் வைரலானது.
திருமணமான நான்கு மாதங்களில் குழந்தை பிறந்தது எப்படி என்ற விமர்சனம் ஒருபுறமும் அழகிய மழலையைப் பெற்ற தம்பதியர்க்கு வாழ்த்துக்கள் என்று ஒருபுறமும் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பதிவுக்கு பதில் வினை விளைந்தது. இந்தநிலையில், 'இரண்டு அழகான ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகியிருக்கீங்க, உலகத்தில் பல குழந்தைகளுக்கு கிடைக்காத அத்தனையும் அந்தக் குழந்தைகளுக்குக் கண்டிப்பா கிடைக்கப் போகுது, இந்த சந்தோஷமான தருணத்தைக் கெடுப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை' என நயன்தாராவுக்கு ஆதரவாகக் களம் இறங்கி, வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ள ட்விட்டர் போஸ்ட் டிரெண்டாகி வருகிறது. பிறரது சொந்த வாழ்க்கையைப் பற்றி மூக்கை நுழைப்பதே சில ஜென்மங்களுக்கு வேலையாக இருக்கும். அதுகூட சட்டப்படி குற்றம்தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை என வெளுத்து வாங்கி, கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
மேலும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் குழந்தைகளுடன் உங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியுடன் இருங்கள் என வாழ்த்தி உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், அதைப் பற்றி விமர்சிக்க ஆரம்பித்துள்ள வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் வாழ்த்து தெரிவித்து ஒரு சூப்பர் போஸ்ட் போட்டுள்ளார். இதைவிட உலகில் வேறு என்ன சந்தோசம் இருக்க முடியும். இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஆகியுள்ள விக்கி நயனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
அதே சமயத்தில், நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாரா? அது சட்டப்படி சரியா? என விவாதங்களும் கிளம்பியுள்ள நிலையில், அப்படி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'லீகல் தெரியும் மெடிக்கல் தெரியும்னு சில முட்டாள்கள் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவார்கள், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்' என வாழ்த்தி உள்ளார்.
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் சமூக வலைத்தளத்தில் பலரும் பலவிதமாக விமர்சித்து பேசியிருந்தனர். வனிதா விஜயகுமார் செய்து கொண்ட திருமணங்கள், அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனை, பீட்டர் பால் என்பவருடன் கடைசியாக நடந்த திருமணம் மற்றும் பின்னர் அவரை பிரிந்தது என ஏகப்பட்ட சர்ச்சைகளையும் கடந்து வாழ்ந்து வரும் வனிதா விஜயகுமார், நடிகை நயன்தாராவுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்துள்ள நிலையில், வனிதா விஜயகுமாரின் கருத்துக்கு ட்விட்டர்வாசிகளிடையே வரவேற்பும் பாராட்டும் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2