வாழை திரைவிமர்சனம் - கண்களை குளமாக்கிய காவியமா? மொக்கைப்படமா?
வாழை திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்;
Vaazhai Review Tamil | Vaazhai Thiraivimarsanam | Vaazhai Padam Eppadi Irukku | Vaazhai Movie Review in Tamil | Vaazhai Chennai Theatres | Vaazhai Coimbatore Theatres | Vaazhai Tirunelveli Theatres | Vaazhai Madurai Theatres | Vaazhai Trichy Theatres
நடிகர் கலையரசன் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த ஆகஸ்ட் 23 ம் தேதி வெளிவந்த Vaazhai Review in Tamil வாழை படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. வாழை திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Vaazhai Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் சூரிய பிரதமன் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது.
Vaazhai Review in Tamil
Vaazhai Trailer
வாழை ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Vaazhai OTT Release Date & Digital Streaming Rights
நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew
திரைப்படம் : வாழை (2024)
வகை : Genre
மொழி : தமிழ்
ரிலீஸ் தேதி : ஆகஸ்ட் 23
இயக்குநர் : மாரி செல்வராஜ்
தயாரிப்பாளர் : சஜித் சிவானந்தன்
திரைக்கதை : மாரி செல்வராஜ்
கதை : மாரி செல்வராஜ்
நடிப்பு : கலையரசன், நிகிலா விமல்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்
எடிட்டிங் : சூரிய பிரதமன்
தயாரிப்பு நிறுவனம் : டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்
-
வாழை படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Vaazhai Padam Eppadi Irukku ? Twitter Review
#Vaazhai - Lot of well placed Beautiful references of Superstar #Rajinikanth & Ulaganayagan #KamalHaasan throughout the first half🌟The theatrical response of those scenes was too crazy😁❤️🔥 pic.twitter.com/aFKhKIFo6r— 𝑽𝒊𝒔𝒉𝒏𝒖 (@Vishnu13112001) August 23, 2024
வாழை 🙏🙏🙏😰😰😭@mari_selvaraj இன்னும் எத்தனோயோ படங்கள் எடுத்தாலும் இதுதான் பெஸ்ட்கண் கலங்க விட்டுட்டயேல😰 pic.twitter.com/wTaSwY5JGE— 𝚂𝙰𝚁𝙰𝚅𝙰𝙽𝙰ᵃⁿᵃⁿᵈʰ (@jsaravanaa28) August 23, 2024
.#Vaazhai - 4.5/5 Mari Selvaraj's Masterpiece. A Well Written Emotional Drama, With Authentic Performances From The Entire Cast, Particularly Sivanaindhan & Sekhar👌. Nikhila Vimal♥️ SaNa's Background Score is Good & the Climax Is Heart-Wrenchingly Emotional. A Must-Watch Movie,…
— Spyki Ragul (@SpykiRagul) August 23, 2024
Mari and Sana make one hell of a combo. Sana was a big miss for Maamannan apart from the collapsed writing by Mari in the second half. And about #Vaazhai I'm sensing that I will not be able to come out of the theatre without crying. If you guys didn't hear Paadhavathi already… pic.twitter.com/nOpuepwWi5
— ℙ𝕣𝕒𝕜𝕒𝕤𝕙ᵐⁱˡˡᵉʳ (@PrakashDfan) August 22, 2024
WHOLESOME 🥹💙✨#Vaazhai pic.twitter.com/7sSQYkcNeh
— vish (@itzvish07) August 22, 2024
🫡❤️🙏 @mari_selvaraj உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது, #Vaazhai -ல் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன்… pic.twitter.com/d3X4LTy0Xh
— VigneshShivan (@VigneshShivN) August 20, 2024
The response from the Press show was enormous!! Thank you for the massive support! ✨🌸The world of #Vaazhai unwraps tomorrow!! #VaazhaifromTomorrow 🎉✨#VaazhaifromAug23 🩶@mari_selvaraj @Music_Santhosh @ayngaran_offl @navvistudios @disneyplusHSTam@RedGiantMovies_… pic.twitter.com/P2cVSQ5BKU— Navvi Studios (@navvistudios) August 22, 2024
வாழை படம் எப்படி இருக்கு? | Vaazhai Padam Eppadi Irukku ?
சாதி துன்பங்கள் கொடுமைகளைப் பேசிய மாரி இந்த படத்தில் அதனுடன் சேர்த்து வர்க்கப் பிரச்னையையுமே பேசியுள்ளார். அது உண்மையில் நடந்த ஒன்றாக இருப்பதால் பார்ப்பவர்கள் அனைவருமே அழுது கொண்டே வெளிவருகிறார்கள்.
முதல் பாதி
பசுமையான நினைவுகள், பள்ளி வாழ்க்கை, ரஜினி Vs கமல் உரையாடல்கள், மாணவர்களுக்குள்ளான சண்டை, திருநெல்வேலி ஸ்லாங் என நினைத்து ரசிக்க பல விசயங்கள் படத்தில் இருக்கிறது. அதனூடேயே மெல்லிய இழையில் சாதி ஏற்றத்தாழ்வுகளால் இயல்பாகிப் போன நடைமுறைகளையும் சொல்லிக்கொண்டே வருகிறார்.
இரண்டாம் பாதி
நாம் நினைக்கும் வாழ்க்கை வேறு இங்கு நடைமுறை வாழ்க்கை வேறு என்பதை முகத்தில் அறைந்தார் போல இரண்டாம் பாதியில் சொல்லி அதிர வைக்கிறார். படம் முடிந்து வெளியே வரும்போது கனத்த இதயத்துடனே வரவேண்டிய நிலைக்கு தள்ளிவிடுகிறார்.
பூங்கொடி டீச்சரைப் பிடிக்கும் என சொல்லும் காட்சியில் சிறப்பான கதை சொல்லலை கையாண்டிருக்கிறார். விபத்து ஒன்றை தத்ரூபமாக கண்முன் நிகழ்த்தி காட்டியிருக்கிறார். மிகை இல்லாமல், உண்மைக்கு மிக நெருக்கத்தில் இதனை சொல்லியிருக்கிறார். பூங்கொடி டீச்சராக நிகிலா விமல் நம் பால்ய கால டீச்சரை நினைவு படுத்தியிருக்கிறார்.
படத்தின் ஹீரோ என்றால் அது சிவனைந்தனும் அவனது தோழனும்தான். நம்மை வியக்க வைக்கும் அளவுக்கு அவர்களின் நடிப்பு இருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசை மிரட்டியிருக்கிறது. கடைசியில் வரும் அந்த ஒப்பாரி பாடல் கண்ணீரில் நம்மை கலங்கச் செய்கிறது. 90 களில் வெளியான இப்போதும் பேருந்துகளில் கேட்டு ரசிக்கும் பாடல்கள் சில படத்தில் சரியான இடங்களில் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. படத்தின் முக்கியமான காட்சியான விபத்து நம்மை அறியாமல் நம்மையும் சம்பவ இடத்துக்குள் கொண்டு செல்கிறது. தேனி ஈஸ்வரின் கண்களின் ஊடே நாமும் படத்தின் ஒரு பகுதியாகிறோம்.
மனித உயிர்கள் மலிவானதாக இருக்கிறது அல்லது மதிக்கப்படுகிறது என்ற ஒரு கருத்து ஆழமாக பதிகிறது. மொழியே தேவையில்லாத ஓர் உலக சினிமா இந்த வாழை. இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள்.
வாழை கதைச் சுருக்கம் | Vaazhai Story Explained
மாரி செல்வராஜ் அவரது மனைவி இன்னும் சில நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் வாழை. இது மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு ஊரில் கூலி விவசாயி குடும்பத்தில் பிறந்த சிறுவன் சிவனைந்தன். அவனுடைய அப்பா சிறுவயதிலேயே இறந்துவிடுகிறார். அம்மாவும் அக்காவும் வாழைத் தோட்டத்தில் வாழைத் தார் அறுத்து அதனை தலையில் சுமந்து சென்று லாரியில் ஏற்றும் பணிகளைச் செய்து வருகிறார்கள். விடுமுறை நாட்களில் சிவனைந்தனும் நண்பன் சேகரும் இந்த வேலைகளை செய்கிறார்கள்.
ஒரு சனிக்கிழமை விடுமுறை நாளில் அம்மாவிடம் சொல்லாமல் வாழைத் தார் சுமக்கும் பணிக்கும் செல்லாமல் பள்ளியில் நடைபெற்ற நடன ஒத்திகைக்கு செல்கிறான் சிவனைந்தன். அந்த நாளில் ஒரு துயரமான விசயம் நடக்கிறது. அதுதான் வாழை.
வாழை ஓடிடி ரிலீஸ் தேதி Vaazhai OTT Release Date
திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்கில் வெளியான நாள் : ஆகஸ்ட் 23
சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil
டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil
ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release
-
வாழை OTT: FAQ
வாழை ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Vaazhai out?
ஆம். வாழை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
வாழை படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Vaazhai hit or flop?
வாழை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வாழை படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Vaazhai ?
மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.