கவியரசர் கண்ணதாசனின் யாரும் அறியா மறுபக்கம் பகுதி 1
Kavignar Kannadasan-கவியரசர் கண்ணதாசன் அவர்களின் மறுபக்கம் சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மைகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.;
Kavignar Kannadasan-1. பாடலாசிரியருக்கான முதல் தேசிய விருதைப் பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான். குழந்தைக்காக (1968) என்ற படத்தில் இடம்பெற்றுள்ள "தேவன் வந்தான்" என்ற பாடலை எழுதி தேசியவிருது பெற்றார்.
2. இயேசு காவியம் என்ற காவியத்தையே வெறும் 8 நாட்களில் எழுதி முடித்தாா் கண்ணதாசன். இது ஒரு அசாத்திய சாதனை நிகழ்வாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
3."அம்பிகை அழகு தரிசனம்" என்ற நூறு பாடல்களடங்கிய நூலை ஒரே நாளில், கண்ணதாசன் இயற்றியது, மற்றுமொரு சாதனை நிகழ்வாகும்.
4. கிறித்துவம், இந்துத்துவம் என காவியம், பாடல்கள் எழுதிய கண்ணதாசன், திருக்குரானுக்கும் உரையெழுத முயற்சியைத் தொடங்கினார். ஆனால், அப்போது இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.
5.கண்ணதாசனுக்கு ஒரு காதலி இருந்ததாகவும் அவர் திருமணம் செய்ய நினைக்கும்போது மரணமடைந்துவிட்டதாகவும் தகவல் உண்டு. அவரை நினைத்துதான் வசந்தமாளிகை பட பாடல்களை எழுதியிருக்கிறார் என்றும் கூறுவார்கள்.
6. தான் தயாரிக்கவிருந்த நான்கு படங்களிலும், கண்ணதாசன், நடிகை தேவிகாவை நாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். தேவிகாவை கண்ணதாசனுக்கு மிகவும் பிடிக்குமாம். அவருடைய வெளிப்படையான குணம்தான் மிகவும் பிடித்த குணமாம். ஆனால் அந்த 4 படங்களுமே எடுக்கப்படவில்லை.
7. கண்ணதாசன் தயாரித்து வெளியான மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலம் நடிகர் டி ஆர் மஹாலிங்கம் மீண்டும் சினிமாவில் இன்னிங்ஸைத் தொடங்கினார். இதற்கு பின் ஒரு காரணம் உண்டு என்று சொல்வார்கள். கண்ணதாசனுக்கும் எம்ஜிஆருக்கும் மோதல் ஏற்படவே, எம்ஜிஆரை படத்திலிருந்து நீக்கிவிட்ட டி ஆர் மஹாலிங்கத்தை வைத்து படமெடுத்ததாக கூறுவார்கள்.
8. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ? என்ற பாடலை எழுத பத்து நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார் கண்ணதாசன். கண்ணதாசன் மிக விரைவாக எழுதிய பாடல் இந்த பாடலாகும். மிக தாமதமாக எழுதிய பாடல், "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தில் இடம்பெற்ற "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாடலாம்.
9. போதைப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படும் கண்ணதாசன், எந்தவொரு மருந்தின் உதவியும் இன்றி, தன் மனஉறுதியாலேயே, ஒரு சில நாட்களிலேயே, அப்பழக்கத்திலிருந்து மீண்டார் என்றும் கூறுவார்கள். ஆனால் இது குறித்த உண்மைத் தன்மை தெரியவில்லை.
10. கண்ணதாசன் தான் அமெரிக்காவிலிருந்து, சிகிச்சை முடிந்து திரும்பியதும் நடிகை மனோரமாவிற்கு பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டிருந்தார் கண்ணதாசன். ஆனால் அது நிறைவேறாமலேயே காலமாகிவிட்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2