கமல்ஹாசன் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update: 2022-07-28 17:37 GMT

தனது நிறுவனத் தயாரிப்பில்  கதாநாயகனாக  உதயநிதிஸ்டாலின் நடிப்பதாக அறிவித்த கமல்ஹாசன்

ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டுகள் விழாவில், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தினை தயாரிப்பதாக கமல் அறிவித்துள்ளார். ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் 54ஆவது படமான இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றையும் கமல் அண்மையில் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றிப் படங்களைத் தயாரித்த, உலகநாயகன் .கமல்ஹாசனின்  ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர்  ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக  உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படம் குறித்த பிற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Tags:    

Similar News