'மாமன்னன்' படப்பிடிப்பு நடந்த ஜருகுமலை கிராமத்தினர்க்கு உதயநிதி உதவி..!

Maamannan -உதயநிதியின் 'மாமன்னன்' படப்பிடிப்பு நிறைவடைந்தது. நிறைவில் ஜருகுமலைக் கிராமத்தினருக்கு உதயநிதி பல்வேறுஉதவிகள் செய்தார்.

Update: 2022-09-15 01:30 GMT

படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.

Maamannan -நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடந்தது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள், சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகுமலை மலைக்கிராமத்தில் நடைபெற்றது.

படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் ஜருகு மலைக்கிராம மக்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது, படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலின், ஜருகுமலை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக, ஜருகுமலை அரசு பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பிக்க, 13.60 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் மலைப்பாதையில் அமைக்கப்பட உள்ள பத்து கன்வெக்ஸ் மிரர், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு மளிகைக்கடை வைக்க மளிகைப் பொருட்கள், மாணவர்கள், திருநங்கைகள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 55 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டன. கிராம மக்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு மனம் நெகிழ்ந்து மகிழ்வான நன்றியைத் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News