ஏ.கே. 62 படத்தில் கீர்த்தி சுரேஷ்?
Ajith 62 movie heroine name-விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.;
பைல் படம்.
Ajith 62 movie heroine name-துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏ.கே. 62 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். குறிப்பாக ஏ.கே. 62 படத்தில் நடிக்க போகும் கதாநாயகி குறித்து சரியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது ஏ.கே. 62 படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகவும், மற்றொரு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏ.கே 62 படத்தில் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க உள்ளார். அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க உள்ளார். மிகப்பெரிய நட்ச்சத்திர பட்டாளத்துடன் உருவாக உள்ள ஏ.கே.62 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.