திடீரென 'டபுள்' ஆக மாறிய சம்பளம்; அதிரடி காட்டும் 'குந்தவை' த்ரிஷா
trisha latest news-சமீபத்தில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், ‘குந்தவை’ என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை த்ரிஷா. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, தனது சம்பளத்தை இரட்டிப்பாக்கி இருக்கிறார் த்ரிஷா.
trisha latest news, trisha news- சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை த்ரிஷா அதே இளமையுடனும், பொலிவுடன் அழகாக இருக்கிறார். நடுவில் இவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.
கமல், விக்ரம், அஜித், விஜய் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. இதைத்தொடர்ந்து த்ரிஷா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில், நடித்து வந்த நிலையில், அவை பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில் மற்ற மொழிகளில் நடித்து வந்த த்ரிஷா, 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'குந்தவை' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம், தற்போது இவருக்கு மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது. அதாவது தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் நயன்தாரா உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக நடிகை சமந்தா, இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த சூழலில் த்ரிஷா ஒரு படத்திற்கு 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த நிலையில், தற்போது புதிதாக நடிக்கும் படங்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டு வருகிறாராம். அதாவது இப்போது நடிக்கும் படத்திற்கு 3 கோடி சம்பளமாக த்ரிஷா கேட்கிறார்.
மேலும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்ததால், அம்மணிக்கு மவுஸ் உள்ளதால் எவ்வளவு கோடி கொடுத்தும் தங்களது படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இதனால் த்ரிஷா அடுத்தடுத்த படங்களில் கையெழுத்திட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் இவ்வாறு தான் நயன்தாராவுக்கும் இடையில் மார்க்கெட் குறைந்து, அதன் பிறகு தனது தரமான படங்கள் மூலம் 'கம்பேக்' கொடுத்து முன்னணி ஹீரோயின் ஆக நயன்தாரா வலம் வருகிறார். அதேபோல், தற்போது த்ரிஷாவும் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி, தூள் கிளப்பி வருகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே 'த்ரிஷா' தனது படங்களில் நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக விஜய் உடன் நடித்த 'ஆதி', தனுஷ் உடன் நடித்த 'கொடி', கமல் உடன் நடித்த 'மன்மதன் அம்பு', விஜய் உடன் நடித்த 'திருப்பாச்சி', அஜீத் உடன் நடித்த 'கிரீடம்', ஜெயம் ரவியுடன் நடித்த 'உனக்கும் எனக்கும்', சித்தார்த் நடித்த 'அரண்மனை 2' என பல படங்களை சொல்ல முடியும்.
இதில், 'கொடி' படத்தில், காதலனையே கொலை செய்யும் அரசியல்வாதியாக, வில்லி கேரக்டரில் நடித்த த்ரிஷா நடிப்பு பேசப்பட்டது. 'பேட்ட' படத்தில், 'பிளாஷ்பேக்' காட்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக நடித்ததும் த்ரிஷா தான். தற்போது, 'குந்தவை' தந்த வெற்றியின் விளைவாக, தன் புதிய படங்களுக்கு 'டபுள்' சம்பளம் பெறுகிறார் த்ரிஷா.