காஷ்மீரில் திரிஷா... வெளியான புகைப்படத்தால் ஸ்தம்பித்த நெட்டிசன்கள்!

லோகேஷ் கனகராஜ் திரிஷாவை இரண்டு நாட்களிலேயே படம்பிடித்து அனுப்பிவிட்டார், அவருக்கு ஒரு சீன் மட்டும்தான். ஆரம்பத்திலேயே அவரைக் கொலை செய்துவிடுகிறார்கள் என்றும் தகவல் பரவியது.;

Update: 2023-02-15 11:15 GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இப்போதைக்கு கதாநாயகிகளில் சீனியர் இவர்தான். ஆனால் பார்ப்பதற்கு இன்றும் 27 வயது பெண் போல் காட்சியளிக்கும் திரிஷா சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வந்துகொண்டிருக்கிறார்.

லேசா லேசா பாலா, விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸி, 96 ஜானு, பொன்னியின் செல்வன் குந்தவை என இந்த கதாபாத்திரங்களின் பெயர்கள் திரிஷாவுக்கு உரித்தாகிவிட்டது. இனி யாரும் இப்படி ஒரு விசயத்தைத் தொட முடியாத அளவுக்கு இதனுடன் சேர்த்து இன்னமும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் திரிஷா.

இப்போது தளபதி விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தளபதி விஜய்யின் 67 வது படமான இந்த படம்தான் திரிஷாவுக்கும் 67வது படம். இதுமட்டுமின்றி விஜய் - திரிஷா ஜோடி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஜோடியாகும். 2000களில் இவர்கள் நடிப்பில் வெளியான பாடல்கள் அவ்வளவு வரவேற்பை பெற்றிருக்கும்.

சென்னை, கொடைக்கானலில் முதற்கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்த படக்குழு அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு சென்றிருக்கிறது.

லியோ படத்தில் திரிஷா ஒப்பந்தமான நிலையில், அவரையும் அழைத்துக் கொண்டு காஷ்மீர் சென்றது படக்குழு. இதனிடையே திரிஷாவுக்கும் லோகேஷுக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் அதனால் இடையிலேயே திரிஷா காஷ்மீரிலிருந்து சென்னை வந்துவிட்டதாகவும் ஒரு தகவல் பரவியது.

லோகேஷ் கனகராஜ் திரிஷாவை இரண்டு நாட்களிலேயே படம்பிடித்து அனுப்பிவிட்டார், அவருக்கு ஒரு சீன் மட்டும்தான். ஆரம்பத்திலேயே அவரைக் கொலை செய்துவிடுகிறார்கள் என்றும் தகவல் பரவியது. மேலும் திரிஷாவுக்கு மரியாதை தரப்படவில்லை என்பதால் கோபித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டதாகவும் சிலர் கூறினார்கள்.

காஷ்மீர் குளிர் திரிஷாவுக்கு ஒத்துக்கவில்லை இதனால் திரும்பு சென்னைக்கு வந்துவிட்டார் என்றும் கூறினார்கள். இதனிடையே இன்னொரு தகவலும் பரவியது. அது திரிஷாவுக்கான பாடல் காட்சி மட்டும்தான் காஷ்மீரில் எடுத்திருக்கிறார்கள் எனவும், மீண்டும் சென்னையில் திரிஷா படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறியது.

உண்மை என்ன என நாம் விசாரித்தபோதுதான் திரிஷாவுக்கு ஷூட்டிங் இல்லாத நாளில் அவர் சென்னை திரும்பியிருக்கிறார். மீண்டும் இரண்டொரு நாளில் அழைக்கப்படுவார் என்கிறார்கள். அதற்கு சண்டை பயிற்சியாளர்கள் மிகவும் பிஸியாக இருப்பதால், அவர்கள் பங்கேற்கும் காட்சிகளை முதலில் எடுத்துவிட்டு, பின் திரிஷாவை வரவழைக்கலாம் என்று கூறியிருந்தார்கள்.

இந்நிலையில், மீண்டும் திரிஷா படக்குழுவுடன் இணைந்துள்ளார். அவர் சென்னைக்கு வந்தாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை ஆனால் இரண்டு, மூன்று நாட்களாக அவருக்கு ஷூட்டிங் இல்லை. இப்போது அவர் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் திரிஷா உடன் பணிபுரிபவர்கள், அவரிடம் வேலை செய்பவர்கள் அனைவரையும் நண்பர்களைப் போலவே பழகுவாராம். இதனால் அவர்களுடனேயே சில நேரங்கள் செலவிடுகிறார் போல. புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால் லியோ படம் சம்பந்தப்பட்டவர்கள் என்று மட்டும் தெரிகிறது. 

Tags:    

Similar News