பிரபல நடிகைக்கு தினமும் சாப்பாடு அனுப்பும் சூப்பர் ஸ்டார்! அடடே..!
சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் தனது படத்தில் நாயகியாக நடிக்கும் நடிகைக்கு தினமும் தனது வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பி வருகிறாராம்.;
சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் தனது படத்தில் நாயகியாக நடிக்கும் நடிகைக்கு தினமும் தனது வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பி வருகிறாராம். அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை திரிஷாதான்.
திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். கடைசியாக வந்த பொன்னியின் செல்வன் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் தக்லைஃப் படத்திலும் திரிஷா இருக்கிறார். இது தவிர தெலுங்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார். அதில் உணவு குறித்த புகைப்படங்களும் இருந்தது. தனக்கு சிரஞ்சீவி வீட்டிலிருந்து தினமும் உணவு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சிரஞ்சீவி, திரிஷா, மீனாட்சி சவுத்ரி, ஆஷிகா ரங்கநாதன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. 2025 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டம் தீட்டி அதற்கான வேலைகளை பார்த்து வருகிறது படக்குழு. கடந்த 2022ம் ஆண்டு பிம்பிசாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மல்லிடி வஷிஷ்டா இந்த படத்தை இயக்கி வருகிறார்.