‘எனக்கே இது வித்யாசமான அனுபவம்தான்’ - நடிகை த்ரிஷா உற்சாகம்
Trisha, Aishwarya Lekshmi about PS2-பொன்னியின் செல்வன் படம், இரண்டு பாகங்களில் நடித்தது எனக்கே வித்யாசமான ஒரு அனுபவமாக இருந்தது, என நடிகை த்ரிஷா ரசிகர்கள் மத்தியில், உற்சாகமாக கூறினார்.;
Trisha, Aishwarya Lekshmi about PS2, Ponniyin Selvan 2 Audio & Trailer Launch, Ponniyin Selvan 2 Audio Trailer Launch LIVE Updates - வரும் ஏப்ரல், ௨௮ம் தேதி, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ௨ம் பாகம் வெளிவருகிறது. கடந்தாண்டு இப்படத்தின் முதல்பாகம் வெளிவந்து, 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. எனவே, இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர் மற்றும் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. முதல் பாகத்தில் நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா, குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷா ஆகியோர் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தனர்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பொருத்த வரை, அதில் ஆண் கதாபாத்திரங்களை காட்டிலும் பெண் கதாபாத்திரங்களே அதிக முக்கியத்துவம் பெறுவர். அவர்கள் மூலமாகவே, கதையின் முக்கிய அம்சங்கள் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு செல்லும், அந்த வகையில் நந்தினி, குந்தவை இருவரது செயல்பாடுகளும், திட்டங்களும் அடுத்தடுத்து அவர்கள் செய்யும் ராஜதந்திரங்களும்தான் கதையில் நிறைய சுவாரசியங்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில், கதையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கேரக்டர்களில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய், குந்தவை கேரக்டர்களுக்கு இரண்டாம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆடியோ ட்ரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது த்ரிஷா கூறியதாவது,
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடிக்கும்போது, சற்று நடுக்கமாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் நடித்த பிறகு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரே படத்தில், இரண்டு பாகங்களில் நடிப்பது இது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. இரட்டை க்ளைமேக்ஸ், இரட்டை நாடகத்தில் நடிப்பது, வித்யாசமாக தோன்றியது. மணிரத்னம், அவரது படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு நிறைய சஸ்பென்ஸ் வைத்திருப்பார். அதுபோல், இந்த படத்திலும், நிறைய சஸ்பென்ஸ் இருக்கிறது, என்றார்.
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு காரில் வந்த த்ரிஷாவை ரசிகர்கள் சுற்றி வளைத்துக்கொண்டனர். சில நிமிடங்கள் காருக்குள் அமர்ந்திருந்த த்ரிஷா, அதன்பின் பாதுகாவலர்களின் உதவியுடன் நிகழ்ச்சி பகுதிக்குள் வந்தார். மேடைக்கு அருகில் நின்றிருந்த நடிகர் பார்த்திபன் வற்புறுத்திய பிறகு, த்ரிஷா மேடை ஏறி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவுக்கு முன்னதாக பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, இந்த படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்தது பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. மணிரத்னம் படத்தில், ஒரு காட்சியில் வந்துபோவது போன்ற காட்சி கிடைத்தாலே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அந்த வகையில், இந்த படத்தில் இந்த கேரக்டரில் நடித்ததை, பெருமையாக கருதுகிறேன், என்றார்.