ஓடிடியில் வெளியாகப் போகும் 'திருச்சிற்றம்பலம்'..!

தனுஷ் நடிப்பில்வெளியாகி திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' ஓடிடியில் வெளியாகப்போகிறது.

Update: 2022-09-19 11:08 GMT

நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான படம், 'திருச்சிற்றம்பலம்'. இப்படத்தில் நாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும், இயக்குநர் பாரதிராஜா, நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்கங்களில் வெளியாகி, இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிக்குவித்து தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து ஓடிடியில் எப்போது வெளியாகப்போகிறது என்கிற கேள்வி தனுஷ் ரசிகர்களின் மனத்தில் அலையெழுப்பத் தொடங்கிவிட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியான 'திருச்சிறம்பலம்' திரையரங்குகளில் வெளியானதிலிருந்தே நேர்மறையான விமர்சனங்கள் வரிசைகட்டி வலம் வந்தன. இதனால், வெளியானதில் இருந்து இன்னமும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில்தான், ஓடிடி தளத்தில் படம் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி பலமாக பரவலாக எழுந்தது. அதற்கான விடையாகத்தான், படம் வருகிற செப்டம்பர் 23-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகப்போகிறது என்கிற தித்திப்புச் செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News