நடிகை சமந்தா தந்தையின் சோகப்பதிவு.. வைரலாக்கும் ரசிகர்கள்
Samantha Latest News - நடிகை சமந்தாவின் தந்தை போட்ட உருக்கமான பதிவு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.;
Samantha Latest News - நடிகை சமந்தாவின் தந்தை போட்ட உருக்கமான பதிவு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். - நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது 2017ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கோவாவில் நடைபெற்றது.
நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது. பின்னர் 2021ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
விவாகரத்துக்குப்பின் நடிகை சமந்தா பிஸியாகி, கைவசம் தற்போது 5 படங்களை வைத்துள்ளார். தற்போது ஹிந்தியில் களமிறங்குவதால் அவரது சம்பளத்தையும் அதிகரித்துள்ளார். ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வரை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
samantha news
இந்த நிலையில், சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு முகநூலில் போட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "நீண்ட காலத்திற்கு முன்பு; ஒரு கதை இருந்தது; அது தற்போது இல்லை!! அதனால் நாம் புது கதையை, அத்தியாயத்தை தொடங்கலாம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
சமந்தா திருமண போட்டோக்களை வைத்து அவர் போட்டிருக்கும் அந்தப் பதிவை நாக சைதன்யா ரசிகர்கள் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2