உனக்கும் கம்பேக்...எனக்கும் கம்பேக்..! நாயகனும் இயக்குநரும் போடும் அசத்தல் கணக்கு!

அந்தகனுக்கு பிறகு பிரசாந்த் இணைவது யாருடன் தெரியுமா? அந்த டெரக்டரா பலே ஆளாச்சே..!;

Update: 2024-07-25 07:15 GMT

அந்தகன், தி கோட் திரைப்படங்களைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் புத்தம் புது பொலிவுடன் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கிறாராம் டாப் ஸ்டார் பிரசாந்த். அவரை அடுத்து இயக்கும் இயக்குநருக்கும் கம்பேக், தனக்கும் கம்பேக் என சூப்பரான திட்டத்தைப் போட்டு வைத்துள்ளனர் இருவரும். அந்த இயக்குநர் யார், படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அந்தகன் பொருள் | Andhagan Meaning in Tamil

டாப் ஸ்டார் பிரசாந்த் தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். அந்தகன் என்பதற்கு அழிப்போன், எமன், புல்லுருவி, அசுரன், அரசன் என பல பொருள் இருந்தாலும், இது நேரடியாக கண் தெரியாத ஒருவர் என்பதையும் குறிக்கிறது. அதாவது இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இது. அந்த படத்தில் நாயகன் கண் தெரியாத அப்பாவியாக நடிப்பார். அதுபோலத்தான் இந்த படத்திலும் நாயகனுக்கு கண் தெரியாது. அதனால் சரியான பொருளில் இந்த படத்தின் பெயரை வைத்துள்ளனர்.

அந்தகன் ஹிந்தி ரீமேக் | Andhadhun tamil remake name

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஹிந்தியில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்தாதூன். இந்த படத்தில் தபு, ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே, அனில் தவான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அக்டோபர் 5ம் தேதி வெளியான இந்த படம் 32கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. ஆனால் இந்த படம் பயங்கரமான வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இந்த படம் வசூலை வாரிக் குவித்தது. மொத்தம் 456 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார். முதலில் இந்த படத்தை வேறு யாரிடமாவது விற்றுவிட நினைத்து பின் தானே தன் மகனை ஹீரோவாக வைத்து எடுக்கத் திட்டமிட்டார். அதன் விளைவாக வந்ததே அந்தகன்.

கௌதம் மேனன், மோகன் ராஜா, ஜேஜே பெட்ரிக் ஆகியோரைத் தொடர்ந்து இதன் இயக்குநராக தியாகராஜனே களமிறங்கி சம்பவம் செய்துள்ளார். படத்தை எப்படி எடுத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த படத்தில் கௌதம் மேனன் | Gautham Menon Next

பிரசாந்த் தற்போது நடித்து முடித்துள்ள அந்தகன், திகோட் படங்களைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிரசாந்த் கௌதம் மேனனுடன் ஒரு சூப்பரான ரொமான்டிக் படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்க கடந்த 2019ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அப்போது கௌதம் மேனன் வேறு படங்களில் பிஸியாக இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு பல பிரச்னைகளும் இருந்ததால் அவர் இந்த படத்தை இயக்க முடியாமல் போயிவிட்டது. இதனால் அவர் வேறொரு படத்தை இயக்குவது என அப்போது பேசப்பட்டது. அதன்பிறகு இது சம்பந்தமாக யாரும் பேசவும் இல்லை.

சரிந்த கௌதம் மேனன் மார்க்கெட் | DhruvaNatchathiram Release Date

எந்த வேகத்தில் உயர்ந்தாரோ அதைவிட வேகமாக சரிந்தது கௌதம் மேனன் மார்க்கெட். இதனால் அதன்பிறகு அவரின் கதையில் நடிப்பது குறித்து பிரசாந்த் யோசிக்கவே இல்லை. பிரசாந்துக்கும் பெரிய ஹிட் ஒன்று தேவைப்பட்டது. அது சரியான படமாக இருக்க வேண்டும் என்பதால் அந்தாதூன் ரீமேக் ரைட்ஸ் வாங்கப்பட்டது.

இப்போது கௌதம் மேனன் துருவநட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நடிக்கும் புதிய தமிழ் படத்தை இயக்குவார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக துருவநட்சத்திரம் பட வெளியீட்டுக்கு பிறகே வெளியில் வரும்.

துருவ நட்சத்திரம் | DhruvaNatchathiram

விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள், மனதை மயக்கும் இசை, திரில்லர் கதைக்களம் என பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய 'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ், இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த நீண்ட காத்திருப்பிற்கு என்ன காரணம்? இத்திரைப்படம் வெளிவர தாமதமாகும் பல்வேறு காரணங்கள் உள்ளன.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களை தனித்துவமான பாணியில் உருவாக்குவதில் வல்லவர். ஆனால், துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு, பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இது படத்தின் வெளியீட்டைப் பல முறை தள்ளிப்போட வழிவகுத்தது.

துருவ நட்சத்திரம் 2 | Dhruva Natchathiram 2

ஒருவேளை துருவநட்சத்திரம் படத்தின் அடுத்த பாகத்தில் பிரசாந்தும் உடன் இருப்பாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. முன்பு ஒரு பேட்டியில் கௌதம் மேனன் தனது துருவநட்சத்திரம் படத்தை தொடர்ந்து பல பாகங்களாக எடுப்பேன் எனவும் அதில் விக்ரம் கதாபாத்திரத்துடன் வேறு வேறு கதாபாத்திரங்களும் முன்னணி நடிகர்கள் நடிக்க வந்து செல்லும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே துருவ நட்சத்திரம் பஞ்சாயத்தில் விக்ரமுக்கும் கௌதமுக்கும் சண்டை என்பதால் அடுத்த பாகத்தை பிரசாந்த்தை கதாநாயகனாக வைத்தும் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News