நடிகை பிந்து மாதவி பிறந்த தினம் இன்று
பிந்து மாதவிக்கு கழுகு திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.கவர்ச்சிக்கு நோ நோ சொல்லி வந்தவர் இப்பொழுது பச்சைக்கொடி காட்டியுள்ளார்.;
நடிகை பிந்து மாதவி பிறந்த தினம் ஜுன் 14.
பிந்து மாதவி தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், அவரது சிறுவயதில் திருப்பதி , நெல்லூர் , குண்டூர் ,விஜயவாடா, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்தார். பின்னர் சென்னையில் நிரந்தரமாக அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கிய போது அங்கு பிந்து மாதவி படித்தார். வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார். டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்கு திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது. இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை. தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மேலும் இரு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்த நடிகை பிந்து மாதவிக்கு கழுகு திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்து, சிறந்த நடிகையாகவும் அதில் இவருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் விமல் ஒன்றாக இணைந்து நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்த காமெடி திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.
கழுகு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டும் பாகமும் வெற்றி பெறும் என நினைத்துக் கொண்டிருந்த நடிகை பிந்து மாதவிக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அது அமைந்தது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் டீச்சராக நடித்து அனைவரது இதயங்களிலும் கொள்ளை கொண்ட பிந்து மாதவிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை எதுவும் கொடுக்கவில்லை.
கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, த்ரிஷா ஆகியோரின் வரிசையில் இப்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படத்திலும் நடித்து வரும் நடிகை பிந்து மாதவி ரத்தம் தெறிக்கும் திரில்லர் கதையில் நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகிய முன்னணி நடிகைகளைப் போல தானும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து ஹிட்டை கொடுக்க வேண்டுமென முடிவெடுத்து இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து மிரட்டலான திரில்லர் திரைப்படத்தில் நடித்து வர அதற்கு "யாருக்கும் அஞ்சேல்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி முதல் முறையாக இணைந்து அசத்தி உள்ள இந்த திரைப்படம் வெகு விமர்சையாக சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
பகைவனுக்கு அருள்வாய்,யாருக்கும் அஞ்சேல் என அடுத்தடுத்த திரைப்படங்கள் பிந்து மாதவிக்கு வெளியாக இருக்க, கவர்ச்சிக்கு நோ நோ சொல்லி வந்த பிந்து மாதவியும் இப்பொழுது பச்சைக்கொடி காட்டி கவர்ச்சியில் இறங்கி வெறும் பாவாடை சட்டையில் சிக்குன்னு இருக்கும் சிறுத்த இடுப்பை காட்டிக்கொண்டு,முன்னழகு பக்காவாக தெரிய ஹாட்டான டிரஸ்ஸில் விதவிதமான போஸ்களில் இதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியில் இறங்கி எடுத்துள்ள இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை துவம்சம் செய்து ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.