சூர்யாவுக்கு முன் சூப்பர் ஸ்டார்.. ஜெய்பீம் இயக்குநரின் அடுத்த படம்!

த செ ஞானவேல் சொன்ன கதையை ரஜினிகாந்த் கேட்டுவிட்டு இதை லைகா நிறுவன கதை கேட்கும் தலைமையிடம் சொல்லமுடியுமா என்று கூறியிருக்கிறார்கள். அப்போது தான் சூர்யாவிடம் வாக்கு கொடுத்திருப்பதை கூறியுள்ளார் ஞானவேல்;

Update: 2023-02-16 05:42 GMT

தமிழ் திரையுலகின் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று த செ ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம். இந்த படத்தில் நாயகனாக மணிகண்டன், நாயகியாக ஜிஜோ மோல், முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா என பலர் நடித்திருந்தனர். சூர்யாவுக்கு மிக சிறப்பான கதாபாத்திரத்தைக் கொடுத்திருந்தார் இயக்குநர். இந்த படத்தில் சூர்யா நடிக்கும்போதே அவருக்காக இன்னொரு கதை தயார் செய்து அதில் நடிக்க சம்மதம் வாங்கிவிட்டார் த செ ஞானவேல். இதனால் ஜெய் பீம் படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் வரும் படத்தில் சூர்யாதான் ஹீரோ என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இதனால் உடனடியாக ஞானவேல் படத்துக்கு வரமுடியாது என்று கூறியிருக்கிறார்கள். கொஞ்ச நாள் காத்திருப்பதாக கூறியிருந்த இயக்குநர் ஞானவேல், திடீரென ரஜினியைச் சந்தித்து அவருடன் படம் பண்ண ஒப்பந்தத்தை போட்டிருக்கிறாராம்.

சூர்யாவுக்காக கதை தயார் செய்து கொண்டிருக்கும்போது ரஜினி தரப்பிலிருந்து த செ ஞானவேலுக்கு அழைப்பு சென்றிருக்கிறது. இதனால் சூப்பர் ஸ்டாரைக் காண சென்றிருக்கிறார் த செ ஞானவேல். இதனிடையே ஜெய் பீம் படத்தைப் பார்த்து ஏற்கனவே பாராட்டியிருந்தார் ரஜினிகாந்த். அதனை நினைவு கூர்ந்து மீண்டும் பாராட்டியிருக்கிறார்.

அருமையான படம் அருமையான இயக்கம் என இவரைப் பாராட்டிவிட்டு நமக்கு கதை ஏதும் இருந்தா சொல்லுங்களேன் என்று கேட்க, தன்னிடம் இருக்கும் கதைகளின் ஒன்லைனைக் கூறியிருக்கிறார் த செ ஞானவேல்.

முன்னதாக ரஜினிகாந்த் படத்தை இயக்க தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், டான் சிபி சக்ரவர்த்தி, லவ் டுடே பிரதீப் ஆகியோரிடம் தனித்தனியாக கதைகள் கேட்கப்பட்டன. ஆனால் இவர்களிடம் இருந்த கதைகள் பல காரணங்களால் படமாக்க இப்போதைக்கு வாய்ப்பில்லாத காரணத்தினால் அவர்கள் காத்திருக்குமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும் தங்களுக்கு வரும் வாய்ப்புகளை விட வேண்டாம் அதை பண்ணிவிட்டு நேரம் வரும்போது ரஜினிகாந்துடன் இணையலாம் என்றிருக்கிறார்கள்.

இப்போது த செ ஞானவேல் சொன்ன கதையை ரஜினிகாந்த் கேட்டுவிட்டு இதை லைகா நிறுவன கதை கேட்கும் தலைமையிடம் சொல்லமுடியுமா என்று கூறியிருக்கிறார்கள். அப்போது தான் சூர்யாவிடம் வாக்கு கொடுத்திருப்பதை கூறியுள்ளார் ஞானவேல். சரி நீங்கள் சூர்யா தரப்பில் பேசுங்கள், நான் லைகா தரப்பில் பேசுகிறேன் என ரஜினிகாந்த் கூற, இப்போது சூர்யா படத்துக்கு முன் ரஜினியை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

த செ ஞானவேல் இயக்கத்தில் ஜெயிலர் படத்துக்கு அடுத்த படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார். இந்த அறிவிப்பு ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன பிறகுதான் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 3 மாதங்கள் கதை எழுதவும், திரைக்கதை அமைக்கவும் தேவைப்படுவதாக கேட்டிருக்கிறாராம் இயக்குநர். விரைவில் இதுகுறித்த அப்டேட் கிடைக்கும்போது உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். 

Tags:    

Similar News