லியோ படத்தால் லாபமில்லை! திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி!

லியோ படத்தால் லாபமில்லை என திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி பேட்டி கொடுத்துள்ளார்.

Update: 2023-10-26 13:30 GMT

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ படம், உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியாகி, முதல் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்தது. இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதிக வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது.

இந்நிலையில், படத்தின் வெற்றிக்குப் பின்னாலும் சில பிரச்சனைகள் எழுந்துள்ளன. படத்தின் போஸ்டர், டிரைலர், பாடல்கள் என அனைத்துமே கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தன. இந்நிலையில் படத்தின் வசூல் ஆகா ஓஹோ என பேசப்பட்டாலும், படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் என்பதே இல்லை என அதிரடியாக கூறியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

போஸ்டர்

போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் வகையில் இருப்பதால் பல தரப்பிலும் எதிர்ப்பு வந்தது. புகைப்பிடிக்கும் காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கும் என பல்வேறு தரப்பிலிருந்தும் படத்தை எதிர்த்து பதிவிட்டு வந்தனர். சிலர் நீதிமன்றத்துக்கும் சென்றனர்.

டிரைலர்

டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதையும் பலர் எதிர்த்தனர். இது படத்துக்கு நெகடிவ் பப்ளிசிட்டியாக அமையும் என பலரும் எதிர்பார்த்தனர்.

அதிகாலை காட்சி

பிரபல நடிகர் ஒருவர் நடித்த படத்தின் அதிகாலை காட்சி கொண்டாட்டத்தில் ரசிகர் ஒருவர் மேலிருந்து விழுந்து உயிரிழந்தார். அதனால் அதிகாலை காட்சியை யாருக்கும் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது அரசு.

தெலுங்கு பதிப்பு

தெலுங்கு பதிப்பில் லியோ எனும் பெயருக்கு பிரச்னை எழுந்துள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே புரமோசன் பணிகள் எதுவும் செய்யவில்லை என ரசிகர்கள் கடுப்பாகி இருந்த நிலையில், படத்தின் பெயரை மாற்ற தெலுங்கு திரையுலகம் வலியுறுத்தியதால் மேலும் கடுப்பாகிவிட்டனர்.

சீன் லீக்

படம் திரைக்கு வர இருக்கும் இந்த நிலையில், படத்திலிருந்து ஓபனிங் காட்சி மட்டும் லீக் ஆகி அதிர்ச்சியளித்துள்ளது.

இத்தனை பிரச்சனைகளால் சூழப்பட்டாலும், லியோ படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. விஜய்யின் நடிப்பு, லோகேஷ் கனகராஜின் இயக்கம், அனிருத்தின் இசை ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

திரையரங்களுக்கு நஷ்டம்

தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட லியோ திரைப்படத்தால் திரையரங்குகளுக்கு எந்த லாபமும் இல்லை எனவும் வந்த லாபத்தை அப்படியே லலித்குமார் அள்ளிக்கொண்டு போய்விட்டார் எனவும் தமிழ்நாடு திரையரங்கு  உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். திரையரங்குகளுக்கு 20 சதவிகிதமும் தயாரிப்பாளருக்கு 80 சதவிகிதமும் என பங்கு உரிமை ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News