இறுதியாக இடி இறங்கி வந்துவிட்டது-மார்வல் ரசிகர்களே "அசம்பிள்" ஆகுங்கள்

மார்வெல் ஸ்டுடியோவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "தோர் : லவ் அண்ட் தண்டர்" படத்தின் பட்டாசு சரவெடி வெடிக்கும் போஸ்டர்

Update: 2022-04-19 03:37 GMT

இறுதியாக இடி இறங்கி வந்தே விட்டது- மார்வல் ரசிகர்களே "அசம்பிள்" ஆகுங்கள்

மார்வெல் ஸ்டுடியோவின் மிகப்பெரும் காஸ்மிக் அட்வென்ச்சர் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "தோர் : லவ் அண்ட் தண்டர்"  படத்தின் பட்டாசு சரவெடி வெடிக்கும் போஸ்டர் மற்றும் முதல் பார்வை


ஆஸ்கார் விருது பெற்ற டைகா வெயிட்டிடி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் இந்திய ரசிகர்களின் விருப்பமான அவெஞ்சர் தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் நட்சத்திர குழும நடிகர்கள்: டெஸ்ஸா தாம்சன், நடாலி போர்ட்மேன் ஆகியோருடன் நடிகர் கிறிஸ்டியன் பேல் மாரவல் திரையுலகிற்குள் அறிமுகமாகிறார்.

மார்வெல் ஸ்டுடியோஸ் வழங்கும் 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூலை 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'தோர்: லவ் அண்ட் தண்டர்'  படத்தின் முதல் பார்வை, தோர் படத்தில் என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்குமென நீண்டகாலமாக ரசிகர்கள் எதிர்பார்த்த பல விசயங்களை கண்கள் விரிய காட்டியுள்ளது. திரைப்படம் தோரை (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்) ஒரு பயணத்தில் காண்பிக்கிறது, அவர் இதுவரை எதிர்கொண்டதைப் போலான போர்கள் போல் இல்லாமல் - அவரின் உள் அமைதிக்கான தேடலாகும். ஆனால் கடவுள்களின் அழிவை நாடும் கோர் தி காட் புட்சர் (கிறிஸ்டியன் பேல்) என்று அழைக்கப்படும் ஒரு விண்மீன் கொலையாளியால் அவரது ஓய்வு தடைபடுகிறது.

அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட, தோர், கிங் வால்கெய்ரி (டெஸ்ஸா தாம்சன்), கோர்க் (டைகா வெயிட்டிடி) மற்றும் முன்னாள் காதலி ஜேன் ஃபோஸ்டர் (நடாலி போர்ட்மேன்) ஆகியோரின் உதவியைப் பெறுகிறார் தோர். அவர்கள் ஒன்றாக இணைந்து கோர் தி காட் புட்சரின் பழிவாங்கும் மர்மத்தை வெளிக்கொணர ஒரு பயங்கரமான பிரபஞ்ச சாகசத்தை மேற்கொள்கிறார்கள். ("தோர்: ரக்னாரோக்," "ஜோஜோ ராபிட்") படங்களை இயக்கிய டைகா வெயிட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். கெவின் ஃபைஜ் மற்றும் பிராட் விண்டர்பாம் ஆகியோர் இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

Tags:    

Similar News