திறந்துட்டாங்கப்பா திறந்துட்டாங்க : இன்று சினிமா தியேட்டர் திறப்பு

ஆந்திர மாநிலத்தில் கொரோனாவின் தொற்று குறைந்து வருவதால் இன்று முதல் (ஜூலை 31) முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கின்றன.;

Update: 2021-07-31 02:45 GMT

ஆந்திர மாநிலத்தில் கொரோனாவின் தொற்று குறைந்து வருவதால் இன்று முதல் (ஜூலை 31) முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கின்றன.

கொரோனா இரண்டாம் அலையில் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கையை திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் 50 சதவீத பார்வையார்களுடன் திரையரங்கு செயல்படலாம் என ஆந்திர அரசு அறிவித்திருக்கிறது.

இன்று முதல் ஜூலை 31 முதல் திறக்கப்படும் திரையரங்குகளில் இணையதளம் மூலம் டிக்கெட்கள் வேகமாக விற்பனையாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் முகக்கவசம் அணிந்து, இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் தெலங்கானா மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்படுகிறது .

Tags:    

Similar News