நடிகை நயன்தாராவின் 'கோல்டு' வெளியாவதில் தாமதம்..!

நடிகை நயன்தாராவும் நடிகர் பிருத்விராஜும் இணைந்து நடித்த 'கோல்டு' படம் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது.;

Update: 2022-09-02 14:25 GMT

நடிகர் பிருத்விராஜ், நடிகை நயன்தாரா

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், 'பிரேமம்' படத்திற்குப் பிறகு படங்கள் எந்தப் படங்களையும் இயக்காமல் இருந்தார். இந்தத் தருணத்தில்தான் ஃபஹத் ஃபாசில், நயன்தாரா நடிப்பில் 'பாட்டு' என்ற படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால், அதற்கு முன்பாகவே பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் 'கோல்டு' படத்தை இயக்கி முடித்துவிட்டார்.

இந்தப்படம், இயக்குநர் அப்போன்ஸ் புத்திரன், நடிகர் பிருத்விராஜ், நடிகை நயன்தாரா என வித்தியாசமான கூட்டணியில் உருவாகிய 'கோல்டு' படத்துக்கு பட உலகிலும் ரசிகர்கள் இடையேயும் ஏராளமான எதிர்பார்ப்பு உள்ளது. அதன் காரணமே, இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பல முனைகளில் பட்டையைக் கிளப்பியதுதான்.

இந்தநிலையில், 'கோல்டு' திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது 'கோல்டு' படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது சொந்த வலைத்தளப் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட் பதிவில், 'சில காரணங்களால் 'கோல்டு' ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது. எங்கள் தரப்பில் வேலை தாமதமாகிவிட்டதால், 'கோல்டு' திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகும். தாமதத்திற்கு மன்னியுங்கள். 'கோல்டு' படம் வெளியாகும்போது இந்த தாமதத்தை நாங்கள் ஈடுசெய்வோம் என நம்புகிறோம்' என நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்துள்ளார். ஏழாண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் 'கோல்டு' படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'கோல்டு' படத்தைக் காண நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News