OTT எனும் மாய வார்த்தை - எங்கே போகும் இந்த பாதை.. யாரோ..யாரோ..அறிவாரோ?

சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் நிச்சயம் இனி வினியோகஸ்தர்கள் தரப்பில் கிடைப்பது என்பது பெரும் சவாலே

Update: 2022-04-15 09:08 GMT

எங்கே போகும் இந்த பாதை.. யாரோ.. யாரோ... அறிவாரோ?

சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் நிச்சயம் இனி வினியோகஸ்தர்கள் தரப்பில் கிடைப்பது என்பது பெரும் சவாலே... OTT எனும் மாய வார்த்தைளும் புது முகங்கள் எனும் நோக்கில் சிறிய படங்களை தவிர்க்கிறார்கள்...

அப்போது எங்கள் படங்களை மக்கள் எப்படி பார்ப்பது... எனவே எங்கள் "No.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு " படக்குழுவினர் வீதி வீதியாக மக்களை சந்தித்து மக்களுக்கு திரையிட்டு காட்டி சிறிய பட்ஜெட் படங்கள் மக்களிடம் சென்று சேர்க்க முடியும் என்ற முயற்சியை முன்னெடுத்து உள்ளோம்..

அன்புடன்

இயக்குநர் செ. ஹரி உத்ரா

தயாரிப்பாளர் Pss production -Founde Dr. பிரீத்தி சங்கர்

கூடுதல் ரிப்போர்ட்!

டைரக்டர் செ ஹரி உத்ரா இதற்கு முன்னர் தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் மற்றும் கல்தா படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையப்படுத்திய கருத்துகளை கொண்டது. இவர் இயக்கும் 'No 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்குது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான நிஜ கால்பந்து வீரர்கள் இத்திரைப்படத்தில் கதாபாத்திரங்களாக நடிச்சிருக்காய்ங்க. நாயகனாக ஷரத் மற்றும் நாயகியாக ஐரா நடிக்க. அருவி புகழ் மதன், விஜய் முத்து, கஜராஜ், ஹரி, பீம்ஜி, ராசி அழகப்பன், என பலர் நடிச்சிருக்காய்ங்க. இசை ஏ ஜே அலிமிர்ஸாக், ஒளிப்பதிவு வினோத்ராஜா. விளையாட்டில் எவ்வாறு அரசியல் புகுத்தப்படுகிறது என்பதை யதார்த்தமாக முழுக்க முழுக்க ஆக்‌ஷனாக படமாக்கப்பட்டு இருக்குது. படப்பிடிப்பு முழுவதும் 90 சதவீதம் இரவில் கதை நடைபெறும் வகையில் ஏராளமான நடிகர்களுடன் தத்ரூபமாக மதுரை மற்றும் பரமக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துச்சாக்கும்

Tags:    

Similar News