'தி லெஜண்ட்' - பிரமாண்டத்துக்கு உண்டான வசூல் இதுவரை இல்லை..!
The Legend Movie Tamil- 'தி லெஜண்ட்' படம் வெளியாகி, இதுவரையிலான வசூல் எதிபார்த்த அளவுக்கு இல்லை என்கிறார்கள் திரைப்பட வர்த்தகர்கள்.
The Legend Movie Tamil- பான் இந்தியா வெளியீடாக உருவான 'தி லெஜண்ட்' அண்மையில், உலகம் முழுவதும் 2500 திரையரங்கங்களில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 600-க்கும் மேலான திரைகளில் வெளியானது.
சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் இப்படம், வெளியாகி நான்கு நாட்களைக் கடந்த நிலையில் வசூலைப் பொறுத்தவரை சுமார்தானாம். இதுவரை சற்றேறக்குறைய 6.5 கோடி ரூபாய் பாக் ஆபீஸ் வசூல் பெற்றுள்ளதாம். படத்தின் பட்ஜெட்டுடன், இதுவரையிலான வசூலை ஒப்பிட்டுப் பார்க்கையில் வசூல் குறைவுதான் என்கிறார்கள் திரைப்பட வர்த்தகர்கள்.
படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான சரவணன் அருள் புதுமுகம் என்றாலும், படத்தின் பிரமாண்ட உருவாக்கம்... பிரபல இயக்குநர்களான ஜெடி - ஜெர்ரி ஆகியோரின் இயக்கம்… விஜயகுமார், பிரபு, சுமன், நாசர், தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், யோகிபாபு, லதா, ஊர்வசி ராவ்டெலா, கீதிகா திவாரி உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம்… ஹாரிஸ் ஜெயராஜின் இசை… வேல்ராஜின் ஒளிப்பதிவு என படத்துக்கு மிகப் பெரிய பலம் வாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், படம் வெளியான நாள்முதல் கலவையான விமர்சனங்களும் படத்துக்கு எதிர்பார்த்த வசூலும் வரவேற்பும் திருப்தியாக இல்லை என்பதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2