தி கோட் ரிலீஸ் தேதி மாற்றம்..! பின்னணியில் விஜய்?
தி கோட் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகாமல் போனாலும் நாளை ஒரு அப்டேட் வெளியாகும்;
நாளை ரிலீஸ் ஆக இருந்த தி கோட் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மாற்றம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் இன்று அப்டேட் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று தகவல் பரவியது. அதற்கான அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், தயாரிப்பாளர் அர்ச்சனாவும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால் இன்று அதற்கான அப்டேட் வெளியாகும் என்றும் நாளை டிரைலர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாக இன்னும் 20 நாட்கள் இருப்பதால் அதற்குள் டிரைலரை வெளியிட்டால் எப்படி என்று படக்குழு யோசித்து வந்ததாம்.
அதேநேரம் சுதந்திர தினத்தில் டிரைலர் வெளியிடும்போது அது பலரையும் எளிதில் சென்றடையும் என டிரைலர் தயாரிப்பு பணியை வேக வேகமாக செய்து வந்ததாம். ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் அந்த பணிகளை முடிக்கமுடியவில்லை எனவும், அவசர அவசரமாக செய்தால் அந்த டிரைலர் நன்றாக வருமா என்ற சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை விஜய்யிடமும் படக்குழு ஆலோசித்துள்ளது.
முதலில் டிரைலரை கட் செய்யுங்கள் பார்க்கலாம் என்று கூறிய விஜய்க்கு, அவசர அவசரமாக டிரைலர் கட் செய்து அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முதல் டிரைலரில் விஜய் இம்ப்ரஸ் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தின் டிரைலரை இன்று வெளியிட வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்துவிட்டதாம். அதாவது நாளை சுதந்திர தினத்தில் டிரைலரை வெளியிடவேண்டாம் அதற்கு பதிலாக வேறு அப்டேட் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தி கோட் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகாமல் போனாலும் நாளை ஒரு அப்டேட் வெளியாகும் என்றும் அதில் டிரைலர் ரிலீஸ் தேதி கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, வரும் ஆகஸ்ட் 17ம் தேதி தி கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியிட இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.