தி கோட் டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்! விபியே சொல்லிட்டாரா?
தி கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது.;
தி கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் படம் எப்படி வந்திருக்கிறதோ என கவலையும் கொள்கின்றனர்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் தி கோட். அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாடல் படு சுமாராக இருந்ததால் விஜய் ரசிகர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். அஜித், ரஜினி ரசிகர்கள் இந்த பாடலையும் அதில் விஜய்யின் தோற்றத்தையும் வைத்து கிண்டல் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாக்கிவிட்டீர்களே வெங்கட் பிரபு என இயக்குநரை அனைவரும் திட்டி வருகின்றனர்.
தி கோட் என்று பெயர் வைத்தால் மட்டும் பத்தாது. பாடல்களையும் அதற்கு ஏற்றாற்போல கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா இருவரையும் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அஜித்துக்கும், தனுஷுக்கும் சிறந்த இசையைக் கொடுத்துவிட்டு தளபதி என்று வந்தால் மட்டும் இப்படி கொடுக்கிறீர்களே யுவன் என விஜய் ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். அந்த அளவுக்குதான் மூன்றாவது பாடல் அமைந்துள்ளது.
தி கோட் திரைப்படத்திலிருந்து முதல் பாடலான விசில் போடு வெளியான போது கூட இப்படி யாரும் புலம்பவில்லை. பாடல் சுமாராக இருந்தாலும் நாளடைவில் கேட்க கேட்க பழகிவிட்டது. பெரிய தாக்கம் இல்லை என்றாலும் ஏதோ பரவாயில்லை என்று கடந்துவிட்டனர் ரசிகர்கள். அதற்கு அடுத்து வந்த மெலோடி பாடலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், மூன்றாவது பாடல் ஸ்பார்க் சாங் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வந்ததும் இந்த பாடலாவது நம்மை காப்பாற்றுமா, அஜித், ரஜினி ரசிகர்களின் டிரோலிலிருந்து நாம் தப்பிப்போமா என்றே பயந்துகொண்டிருந்தனர் விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில், வெங்கட் பிரபு தி கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து பேசியுள்ளார்.
விஜய், மீனாட்சி, சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தினை வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் இந்த மாதம் 3வது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். நமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 22ம் தேதி அல்லது ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்.